தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் நெருக்கடி காரணமாக தனியார் துறையினரை வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டு மக்கள் எரிபொருள் நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் … Read more

தேவையான அளவு டீசல் தொகை கையிருப்பில்.. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

தற்போதைய நிலையில் நாட்டிற்குத் தேவையான அளவு டீசல் தொகை கையிருப்பில் இருப்பதாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் நாளாந்த டீசல் தேவைப்பாடு சுமார் ஐயாயிரம் மெட்ரிக் தென்னாகும். நேற்றைய தினம் ஆறாயிரம் மெட்ரிக் தொன் டீசல் விநியோகிக்கப்பட்டுள்ளது. எனினும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எதிர்வரும் 23ம் 24ம் திகதிகளில் பெற்றோலை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. அதற்கான கடன் கடிதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 3, 4 தினங்களுக்குள் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு … Read more

கோட்டா – ரணிலை சுற்றி கருமேகங்கள்! அடுத்த எரிபொருள் கப்பலை விட தொலைவில் உள்ள 21

கருமேகங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான கூட்டிணைவு ஏற்பாட்டின் மீது கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இருவரும் ஆரோக்கியமான தனிப்பட்ட நல்லுறவைக் கொண்டிருந்தாலும், விரிவடையும் வேறுபாடுகள் நாளுக்கு நாள் வெளியாவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு யாரை நிரப்புவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியதாக பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களி்டம் தெரிவித்துள்ளார். இரண்டு பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? எனினும் அவர்களுக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படாது என்று ஜனாதிபதி கோட்டாபய உறுதியளி்த்துள்ளதாக பிரதமர் … Read more

ஜூலை 01 ஆம் திகதி முதல் பலாலி சர்வதேச விமான சேவை ஆரம்பம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதுதொடர்பில் நேற்று (17) பலாலி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்தார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விமான நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர் இதுதொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்தச் சேவைகள் … Read more

புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா அழைப்பு

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன், புலம்பெயர்ந்த தமிழர்கள், வடக்கில் உள்ள தமது தாயகத்திற்கு திரும்பி,  முதலீடுகளை மேற்கொண்டு புதிய தொழில்களை ஆரம்பிக்குமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்தார்.  பலாலி விமான நிலையத்தை நேற்று பார்வையிட்ட பின்னர இவ்வாறு அமைச்சர் குறிப்பிட்டார்.  

நாம் அனைவரும் கூண்டுக்குள் இருக்கின்றோம்: எச்சரிக்கும் சனத் ஜயசூரிய

நாட்டு மக்களை பாதுகாப்பதே பொலிஸாரின் முதன்மையான பணி எனவும் அதனை நினைவில் வைத்து அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். மக்கள் மீது தற்போது பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். The police must remember that their prime directive is to be just and protect the innocent people of … Read more

சிறுபோகத்திற்குத் தேவையான உரம்: எதிர்வரும் 4ம் திகதி விநியோகம்

சிறுபோகத்திற்குத் தேவையான உரம் எதிர்வரும் 4ம் திகதி விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை விரைவாக விவசாயிகளுக்கு கையளிப்பதே நோக்கமாகும். இதன் பின்னர் ஒவ்வொருபோகத்திற்கும் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில்  வழங்குவது தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள்

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 41 இலங்கையர்கள்  நாடுகடத்தப்பட்டுள்ளனர். அந்நாட்டு கரையோரப் பாதுகாப்புப் படைப்பிரிவினால் கைது செய்யப்பட்ட இவர்கள் சமீபத்தில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 35 பேர் வயதுவந்தவர்கள்இ மற்றும் ஆறு பேர் 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகள். இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு சிலாபம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நூற்றுக்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களுடன் வந்ததிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டுநாயக்க விமான … Read more

சமையல் எரிவாயுக்காக அரசாங்கம் கண்டுப்பிடிக்கும் உத்தி

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அடுப்பு வகைகளை அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளதாக கைத்தொழில் அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். தென் பகுதியிலுள்ள ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதோ அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,”நாட்டில் சமையல் எரிவாயு பெற்றுக்கொள்வதில் கடுமையான நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. சமையல் எரிவாயு விறகு பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கும் நகர மக்கள் மற்றும் அடுக்கு மாடி வீடுகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு பயன்படுத்தக் … Read more