மதுபோதையில் கலகம் விளைவித்த கும்பலைக் கட்டுப்படுத்த இராணுவம் வான் நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு

முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை (18) இரவு 8.00 மணியளவில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரைத் குழப்பும் முகமாக, கட்டுக்கடங்காத கும்பல் ஒன்றினால் அதிலும் மதுபோதையில் இருந்த குழு ஒன்றினால் இராணுவத்தினர் மீது திட்டமிட்ட வகையில் போத்தல்கள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை முறியடிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததன் மூலம் பதற்றமான சூழ்நிலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினாரல் கட்டுப்பாட்டுக்குள் … Read more

லோகேஷ் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்குமாம், செம்ம மாஸ்

தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது. இந்நிலையில் அன்றைய நாளில் தளபதி 66 பர்ஸ்ட் லுக் வெளிவரும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும். தற்போது தளபதி 66-யை விட எல்லோர் எதிர்ப்பார்ப்பும் தளபதி 67 மீது தான், ஏனெனில் அப்படத்தை லோகேஷ் இயக்குவதால். இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதையம்சம் கொண்டது என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு விஜய் அதில் தன் நிஜ வயது கதாபாத்திரத்திலே படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. Source link

இலங்கையில் அறிமுகமாகும் புதிய தானம்!

இலங்கையின் புதிய தானம் அறிமுகம் இலங்கையில் பௌத்த மதத்தின் ஒரு அங்கமான “தன்சல்” என்ற போசனத் தானத்தை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போசனத் தானத்தை பல்வேறு இடங்களிலும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு இடங்களில் வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் நின்று தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி வருகின்றனர். மணித்தியாலங்கள், நாட்களாகின்றன முன்னர் எரிபொருளுக்காக மணித்தியாலங்கள் என்ற அளவில் காத்திருந்த வாகன ஒட்டுநர்கள் … Read more

வெளிநாட்டுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், தொழில்வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வோருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.   இதன்படி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கு, எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் ஊடாக பரவும் பொய்யான தகவல்கள்  உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரங்கள் மற்றும் குறித்த நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள வேலைகள் பற்றிய அனைத்து … Read more

எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கிய கிரிக்கெட் பிரபலம்

கொழும்பு வோட் பிளேஸ் மற்றும் விஜேராம மாவத்தை ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை வழங்கியுள்ளார். சமூக உணவு பகிர்வு அணியினருடன் இணைந்து எரிபொருள் வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு நேற்று மாலை பனிஸ் மற்றும் தேனீர் வழங்கியதாக ரொஷான் மஹாநாம தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். We served tea and buns with the … Read more

எரிபொருள் வரிசையில் நிற்பவர்களுக்கு எச்சரிக்கை

எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் சாதூர்யமாக பேசி கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொட்டாவ எரிபொருள் வரிசையில் சிக்கி ஏமாற்றப்பட்டவர் பொது மக்களை எச்சரிக்கும் வகையில் இணையத்தில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கொட்டாவ எரிபொருள் வரிசையில் நின்ற நபரிடம் வந்து பேசி நபர் ஒருவர் தங்களிடம் டீசல் உள்ளதெனவும் ஒரு லீட்டர் 300 ரூபாய் என்ற கணக்கில் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார். டீசல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமையினால் 300 ரூபாய்க்கு வழங்குவதாக கூறியதுடன், … Read more

எரிபொருள் வரிசையில் நிற்காதீர்! பொதுமக்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.  அமைச்சரின் செய்தி  எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, தனியார் பயணிகள் பேருந்துகள்  மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு இன்று முதல் 24 மணிநேரமும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருளை வழங்குமாறும் ஏனைய எரிபொருள் … Read more

தேங்காயின் விலையும் அதிகரிக்கிறது

தேங்காய் ஒன்றின் விலையை 200 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.   தேங்காய் உற்பத்தி தொழில் நெருக்கடியில் உள்ளதன் காரணமாக  உற்பத்திச் செலவை சமாளிக்கும் வகையில் தேங்காய் ஒன்றின் விலையை உயர்த்துவது அவசரியம் என தென்னை உற்பத்தியாளர் சங்கத்தின் நிறைவேற்று உறுப்பினரான பேராசிரியர் தீபால் மேத்யூ தெரிவித்துள்ளார்.  தேங்காய் இனி இல்லை தற்போதைய நிலை 2025 இற்குப் பிறகு நீடித்தால் தேங்காய் இருக்காது, மேலும், நாங்கள் தேங்காய் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ள … Read more

இலங்கைக்கு மீண்டும் உதவி! இந்தியா ஆலோசனை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக, மீண்டும் இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியா ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.   நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இது தொடர்பில் ஆராயப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.   இலங்கையுடன் இணைந்து செயற்பட ஒருமித்த ஆதரவு இலங்கை எதிர்நோக்கியுள்ள வெவ்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கு இந்தியாவினால் வழங்கக் கூடிய ஒத்துழைப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான … Read more