கடவுச்சீட்டு பெற காத்திருக்கும் இலங்கையர்களிடம் விசேட கோரிக்கை

கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் சுமார் 350,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்களில் 60,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் அவசரமாக கடவுச்சீட்டை பெற வேண்டிய தேவை இல்லாதவர்கள், அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என மக்களிடம் கேட்டுக் கொள்வதாக திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவின் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் பிரியந்த ஹப்புஆராச்சி தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு அலை வெளிநாடு செல்வதற்காக அவசரத்திற்காக கடவுச்சீட்டு பெற அனைவரும் வரவில்லை என்பது … Read more

இலங்கை வெளிநாட்டுச் சேவை: மூன்றாம் தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை

இலங்கை வெளிநாட்டுச் சேவையின் மூன்றாம் தரத்திற்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப்  பரீட்சை திட்டமிட்டபடி இன்று (19) நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 60 மத்திய நிலையங்களில் இன்று காலை 9.00 மணிக்கு பரீட்சை நடைபெறும். எரிபொருள் நெருக்கடியினால் தாமதமாக வருகை தரும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.  

வட மாகாணத்திலும் ஓரளவு மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஜூன்19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022ஜூன் 19ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல் ,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வட மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ … Read more

பல பிரச்சினைகளுக்கு பிரதமரால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது – வஜிர அபேவர்தன

நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆகையினால், பதற்றமடையாமல் பொறுமையாக இருந்தால், எஞ்சியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார். பொறுமை காக்குமாறு பிரதமர் அறிவுறுத்தல் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறவும், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டை உறுதி … Read more

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் அதானிக்கு இல்லை – அமைச்சர் தகவல்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய வர்த்தகர் கௌதம் அதானிக்கு வழங்கப் போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவின் கோடீஸ்வர வர்த்தகர் கௌதம் அதானிக்கு வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக துறைமுக ஊழியர் தொழிற்சங்கங்கள் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தன.. அதற்குப் பதிலளிக்கும் வகையில்  துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அதன் போது … Read more

வீடுகளில் திருடி மாட்டிக் கொண்ட ஆளும் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்

மாத்தளை மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வீடுகளில் திருடிய சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மாவட்டத்தின் உகுவளை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக மாத்தளை தலைமையக பொலிஸார் அறிவித்துள்ளனர். போதைப்பொருளுக்கு அடிமை குறித்த நபருடன் இன்னும் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து வீடொன்றினுள் நுழைந்து ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.  திருட்டுப் போன தொலைக்காட்சிப் பெட்டி, எரிவாயு சிலிண்டர், மின்விசிறி போன்ற பொருட்கள் … Read more

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை – இந்தியா எடுத்துள்ள தீர்மானம்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து “ஒருமித்த ஆதரவு” இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தலைமையில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன்போது அவர் இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து விளக்கமளித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர்கள் வி.முரளீதரன், மீனாட்சி லேகி, ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர். இதன்போது பல்வேறு பிரச்சனைகள் … Read more

உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விநியோகத்தில் இருந்து விலக நேரிடும் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் விநியோகத்தில் இருந்து விலகுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தடையின்றி எரிபொருளை விடுவிப்பதால் நீண்ட வரிசையில் நிற்பவர்கள் ஆத்திரமடைந்து கலவரமாக நடந்து கொள்வதாக சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலை நீடித்தால் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்பு இதேவேளை, தற்போது … Read more

பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதார பேரழிவின் பின்னால் ஒழியும் இலங்கை: ஐ.நாவுக்கு எச்சரிக்கை

ஜெனீவா – ஐ.நா மனித உரிமைச் பேரவையின் 50வது கூட்டத் தொடரில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜூன் 13, 2022 அன்று சபையில் கூறியதானது, தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையினால் இழைக்கப்பட்ட கொடுங்குன்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதைத் தவிர்ப்பதற்காக, சபையைத் தவறாக வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை எச்சரித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதை … Read more