கொழும்பில் மூடப்படும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு அறிவிப்பு

 அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் தொடர்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இன்று (18) காலை Zoom ஊடாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் கல்விச் செயலாளர், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் … Read more

கொழும்பு நகரின் இரண்டு பிரதேசங்களில் 16 மணித்தியால நீர் விநியோகத் தடை

கொழும்பு நகரின் இரண்டு பிரதேசங்களில் இன்று பிற்பகல் மூன்று மணி தொடக்கம் 16 மணித்தியால நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. கொழும்பு5, கொழும்பு, ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோக துண்டிப்பு இடம்பெறும். பம்பலப்பிட்டி பிரதேசத்திற்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இடம்பெறும் என்றும் சபை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஒரு விற்பனை நிலையம்

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஒரு விற்பனை நிலையத்தை முன்னெடுக்குமாறு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்த விற்பனை நிலையத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17) நடைபெற்ற விவசாயக் குழுக் … Read more

கொழும்பு வந்த லண்டன் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு – ஹீரோவாக செயற்பட்ட விமானி தொடர்பான தகவல்

துருக்கி, அன்காரா விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட பிழையை சரி செய்து விமான விபத்தை தவிர்த்த இலங்கை விமானி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 13ம் திகதி லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த UL 504 விமானம் 35000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்த ஏற்படவிருந்தது. 35000 அடி உயரத்தில் விமானம் பறந்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு விமானம் அதே வழியில் பயணிக்கவில்லை என துருக்கியே விமான கட்டுப்பாட்டு அறை … Read more

துறைசார் தேர்ச்சிகளை உள்வாங்க ,குவைத் தூதுவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் கலந்துரையாடல்

குவைத் தூதுவர் ஹலாப் எம்.எம் புதைர் (Khalaf M.M. Bu Dhhair) அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்திய சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட், இலங்கையின் சுற்றாடல் துறையை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியுள்ளார். அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், வாயுக்களின் வெளியேற்றத்தால் சூழல் மாசடைவதை தடுக்க முடியாவிடினும் குறைக்கும் உபாயங்களை அடையாளம் காண்பதன் அவசியம் குறித்தும் தூதுவருடன் கலந்துரையாடினார். இவ்விடயத்தில், இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உறவாடலில் ஏற்படவுள்ள சாதகங்களையும் இருவரும் பரிமாறிக் கொண்டனர். இயற்கை சக்திகளால், சுற்றாடல் அடையும் … Read more

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த 10 ஆண்டுகளுக்கான ஒரு உறுதியான அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்கவும்

நாட்டில் பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட 10 ஆண்டுகளுக்கான ஒரு உறுதியான அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குமாறு கோபா குழு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (09) கூடிய போதே வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய திட்டங்கள், அனுமதி கிடைக்கப்பெற்று இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் … Read more

பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீதும், பொலிஸாரை தாக்குவோர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.  பொலிஸாருக்கும் எச்சரிக்கை அத்துடன், குறித்த இடங்களில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எல்லை மீறுவார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடாத … Read more

கல்வித்துறையானது கொவிட் சூழலைவிட மோசமான சவாலை…….

ஒட்டுமொத்த கல்வித்துறையும் தீவிரமான மற்றும் சிக்கலான செயன்முறையைக் கடக்க வேண்டியிருப்பதாகவும், கொவிட் சூழ்நிலையைவிட பொருளாதார நெருக்கடியினால் தோன்றியுள்ள நிலையை முகாமைத்துவம் செய்வது சிக்கலாகியுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரத்னசிங்ஹ, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவித்தார். நாட்டில் நிலவும் தற்போதைய கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் கல்வித் துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் … Read more

நாட்டின் உணவு நெருக்கடிக்குத் தீர்வுகாண உணவுப் பாதுகாப்புக் குழுவை அமைக்க கோபா குழு பரிந்துரை

நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்து உணவுப் பாதுகாப்புக்கான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தீர்மானிக்கப்பட்டது. தற்போதைய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, விரைவான முடிவுகளை எடுப்பதற்கும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்தக் குழுவை அமைப்பது முக்கியம் என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் … Read more

அதிகரிக்கும் நெருக்கடி நிலை! மின்வெட்டு நீடிக்கப்படலாம்

எதிர்காலத்தில் மேலும் ஐந்து மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படலாம் என இலங்கை மின்சாரசபை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. நுரைச்சோலை அனல்மின் நிலையம் கட்டாயப் பராமரிப்புக்காக மீண்டும் மூடப்பட்டுள்ளதாலும், உதிரிப் பாகங்களைக் கொண்டு வருவதற்கு டொலர் கிடைக்காததாலும், நிலக்கரியைக் கொண்டு வருவதற்கு நிலவும் டொலர் தட்டுப்பாட்டாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் தகவல் எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் புதிய நிலக்கரி இருப்புகளைக் கொள்வனவு செய்ய வேண்டியிருந்த போதிலும், அவை இன்னும் பூர்த்தி … Read more