இந்தியாவில் புதிதாக 13,216 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 13,216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 213 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று இது மேலும் உயர்ந்து 12 ஆயிரத்து 847 ஆக பதிவானது. இந்நிலையில் இன்று புதிதாக 13 ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் … Read more

கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை

கொழும்பு நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இன்று (18) காலை கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், இணையவழி கற்பித்தலைத் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள அதிகாரிகளின் கூட்டத்தில் இதுதொடர்பாக மீளாய்வை … Read more

இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்படவுள்ள கடன் தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலேயே குறித்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இலங்கை காத்திருக்க வேண்டும் சர்வதேச … Read more

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்கு குடும்ப அட்டை முறை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் , குடும்ப அட்டை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் வர்ணங்களில் இவ்வட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இதன் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் நேற்று (17) இடம் பெற்ற கூட்டத்தின் போது மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்கள் சகலருக்கும் கிடைக்கும் வகையில், பங்கிடுசெய்வதற்கு வசதியாகவு ஒரு குடுப்பத்தில் … Read more

இன்று மின் துண்டிப்பு 2 1/2 மணித்தியாலம்

இன்று (18) மின் துண்டிப்பு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், ஜூன் 15 முதல் 18ஆம் திகதி வரை 2 1⁄4 மணி நேர மின் துண்டிப்பும் ஜூன் 19ஆம் திகதி 1 மணி நேர மின் துண்டிப்பும் அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில், ஜூன் 18 : 2 1⁄4 மணித்தியாலங்கள் KL | U :  – மு.ப. … Read more

கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலை – 6 பொலிஸார் காயம் – பெண் உட்பட பலர் கைது (Video)

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. This is brutal. People are in these queues for days with no food and sleep. @SL_PoliceMedia has no right to physically … Read more

கொழும்பில் பேருந்தை திருடிய 15 வயது பாடசாலை மாணவர்கள்

ஹோமாகம, கலவிலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களுக்குள் பேருந்தை திருடிய குற்றச்சாட்டில் இருவர் பேருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகம – புறக்கோட்டை பேருந்து வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று கலவிலவத்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது யாரோ சிலர் திடீரென பேருந்தை … Read more

இலங்கையில் வேகமாக பரவும் மற்றொரு வைரஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக வேகமாக பரவி வருகின்றதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி கலவானை பிரதேசத்தை அண்மித்து இந்த இன்புளுவன்சா நோய் வேகமாக பரவி வருவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவை வைத்திய பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். 14 பேர் மரணம்  கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது வரையான காலம் வரை இன்புளுவன்சா நோய் தாக்கத்தினால் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் மாதத்தில் 11 … Read more

மின்சாரம் அடுப்பு பயன்படுத்துவோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு தீவிரம் அடைந்துள்ள நிலையில், மின்சார அடுப்பினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில் மின்சாரம் அடுப்பு மூலம் சமையல் செய்து வந்த மக்களின் மின் கட்டணம் இருமடங்காக உயர்ந்துள்ளதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். எனவே நிவாரணம் ஒன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பு மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை விசேடமாக கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக உள்ளது. எரிவாயு, … Read more

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு: இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. ‘பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறு ‘ எரிபொருள் நிலைய உரிமையாளர்களிடம், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கோரிக்கை விடுத்துள்ளார். கடமையில் ஈடுபடும் அதிகாரிகளிடம் உள்ள கடமை தொடர்பான கடிதம் அல்லது உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளை சோதனை செய்து எரிபொருளை விநியோகிக்க முடியும். பெறுபேறுகளை … Read more