பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 18.06.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 18.06.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 18.06.2022
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முடங்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக கல்வி சாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடிகளிற்கு மத்தியில் அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு செல்வதில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிடம் 6000 மெட்ரிக் தொன் எரிபொருளே உள்ளது. அடுத்த கப்பல் எப்போது வரும் என தெரியாத நிலை காணப்படுகின்றது. எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்கள் நாளாந்த பணிகளை செய்யமுடியாத நிலையில் உள்ளனர். எவ்வாறாயினும், … Read more
எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கறுப்புச் சந்தைக்காரர்கள் சார்பில் எரிபொருள் சேகரிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள எண்ணெய் கடத்தல்காரர்களால் நிலைமை மோசமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் மாஃபியா இந்த எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக பொலிஸாரும் இராணுவத்தினரும் … Read more
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் உலகப் பொருளாதார மன்றம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய நெருக்கடியின் அறிக்கையை உலகப் பொருளாதார மன்றம் காணொளியாக வெளியிட்டுள்ளது. பல தசாப்தங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவுவதற்காக பொதுத்துறை ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. பெற்றோல் நிலையங்களில் நேரத்தை கழிக்கும் மக்கள் எரிபொருள், உணவு மற்றும் மருந்து போன்ற முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்துவதற்கு நாடு போராடுவதால், … Read more
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மக்கள் வங்கியில் கடன் கடிதம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக 42.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் கடிதம் மக்கள் வங்கியில் திறக்கப்பட்டுள்ளது. 300,000 பீப்பாய்கள் 92 ஒக்டேன் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் தேவையான எரிபொருளை நாட்டிற்கு விநியோகிக்க முடியாத நிலைக்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் … Read more
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று (17) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்த போதே உமர் பாரூக் புர்கி அவர்கள் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு … Read more
திருகோணமலை மாவட்டத்தின் அனைத்து அரச அலுவலகங்களுக்கு உட்பட்ட காணிகளில் உணவுப்பயிர்களை பயிரிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் திணைக்கள தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார். திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (17) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரள ஆகியோரின் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம இதன் போது கருத்து தெரிவிக்கையில்,திருகோணமலை மாவட்டம் பல வளங்களை … Read more
இலங்கையின் அண்மைய நம்பிக்கை மீறல் காரணமாக, இலங்கைக்கு அடுத்த 500 மில்லியன் டொலர் எரிபொருள் கடன் வசதியை வழங்க இந்தியா தயங்குவதாக தகவல்கள் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் எரிபொருள் விநியோகம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிலையில், கடன் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த வாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, முன்னதாக இந்தியா வழங்கிய எரிபொருள் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு நேற்றைய தினம் 40 ஆயிரிம் மெட்ரிக் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு … Read more
ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியாகும். ஒலிம்பிக்கை போலவே உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 1930-ம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை. இதுவரை 21 உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2018ஆம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 22ஆவது … Read more
அரச ஊழியர்களைப் பணிக்கு அழைப்பதை மேலும் மட்டுப்படுத்தும் வகையிலான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து இரண்டு வாரங்களுக்கு இது அமுல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் பாடசாலைகளை இணைக்கும் முறைமைகள் பற்றிய பேச்சுவார்த்தை கல்வி அமைச்சிற்கும் – மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இடையில் நாளை நடைபெறவுள்ளது. பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.