நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோசடி: முகாமையாளர் கைது(Video)
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்- தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை(17) நள்ளிரவு கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் மக்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு இரவோடு இரவாக சில வசதி படைத்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, நூற்றுக்கணக்கான லீற்றர் மண்ணெண்ணெய் அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். சம்பவம் தலைமன்னார் பியர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று … Read more