இலங்கை ரூபாவிற்கு எதிராக டொலர் பதிவு செய்துள்ள பெறுமதி! மத்திய வங்கி அறிவிப்பு

இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 355.51 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 366.32 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 435.13 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது 452.22 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் குவைத் தினாரின் பெறுமதியானது 1172.60 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் … Read more

இலங்கை அணி வெற்றி

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்  போட்டியில், இலங்கை அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 26 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. . முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 47.4 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ஓட்டங்களை பெற்றிருந்த போது, மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும் … Read more

சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.  போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான சுற்றுநிரூபம்  மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. … Read more

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி, இன்று முதல் மூடப்படும்

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று (17) நல்லிரவு 12 மணி முதல் மூடப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு நடவக்கைகளுக்காக , இந்த மின் உற்பத்தி நிலையத்தை 75 நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று மின்சார பொறியியல் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார். நுரைச்சோலையின் ‘யூனிட் 2’ பகுதியே இவ்வாறு மூடப்பட உள்ளதாக அவர் கூறினார். ‘சுமார் இரண்டு வருடங்கள் … Read more

இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் திருகோணமலைக்கு விஜயம்

இலங்கைக்கான நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் Michael Appleton திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் B. H. N. ஜயவிக்ரமவை சந்தித்துள்ளார். இந்த சந்திய்பு  திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று (16) இடம்பெற்றது . கல்வி,சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து, மீள்குடியேற்றம், குடிநீர் ஏனைய நலன்புரி விடயங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. இதன்போதுமாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  விவசாயம், மீன்பிடி ஆகிய தொழில்கள் குறித்து தெளிவுபடுத்திய அரசாங்க அதிபர்   இம்முறை சிறுபோகத்தில் 28 000 ஹெக்டேயர்  நெல்வேளாண்மை பயிர்ச்செய்கை … Read more

இலங்கையில் மீண்டும் உயர்கிறது தங்கத்தின் விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,910  ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,650  ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கைக்கு காத்திருந்த பாரிய அழிவு! ரணிலால் தவிர்க்கப்பட்ட … Read more

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்ட கைத்தொழில் துறைக்கு புதிய உத்திகள் வகுக்கப்பட வேண்டும் ஜனாதிபதி தெரிவிப்பு

அந்நியச் செலாவணியை விரைவாக ஈட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கைத்தொழில் துறையில் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். நீண்டகாலமாக இருக்கின்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளன. முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளைக் கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்று (16) கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் … Read more

எரிபொருள் விநியோகத்திற்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள பங்கீட்டு முறை அட்டை – செய்திப் பார்வை

எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருளை பங்கீட்டு (RATION) முறைக்கு வழங்கும் அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக ஒரு வாரத்திற்கு 100 லீற்றருக்கான பங்கீட்டு அட்டை கிடைக்கும் நபருக்கு அதில் 60 லீற்றரினை பதிவு செய்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் மற்றும் மீதமுள்ள … Read more

நீதிமன்ற நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமையும் நடைபெறும்

நீதிமன்ற நடவடிக்கைகளை ,வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு நீதிச் சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.சஞ்சீவ சோமரத்ன கடிதம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளார்.. வெள்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை அடிப்படையாகக்கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறைந்தபட்ச எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லது ஊழியர்களைக்கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் … Read more

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு நாட்டில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. எடுக்கப்படவுள்ள நடவடிக்கை அதன்படி அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் குறித்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஸ்தம்பிதமடைந்து முடக்கநிலைக்கு செல்லும் … Read more