நாட்டை முடக்கப் போவதாக நினைத்து அச்சத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

எதிர்வரும் நாட்களில் முடக்கம் அல்லது ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் திட்டம் உள்ளதா என சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முடக்க நிலை அறிவிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன. இதனால் அச்சமடைந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இது தொடர்பில் வினவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முடக்க நிலையை மறுக்கும் ஜனாதிபதி, பிரதமர் எனினும் முடக்க நிலையோ ஊரங்கு சட்டமோ அமுல்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டு … Read more

டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு 44.3 விகிதத்தால் வீழ்ச்சி

2022ம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 44.3 விகிதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், யூரோ, ஸ்ரேலிங் பவுண்ட், ஜப்பானிய யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 2021 இல் 7.0 விகிதத்தினாலும் 2020 இல் 2.6 விகிதத்தினாலும் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கி தெரிவித்திருந்தது. ஜூன் 10, 2022 நிலவரப்படி … Read more

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு – வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் 24ம் திகதி எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் வரை நாட்டில் எரிபொருள் விநியோகம் சீரமைக்கப்படாது என ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். ஒவ்வொரு எரிபொருளின் விலையும் 60 ரூபாவிற்கும் அதிகமாக உயர்த்துவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரின் கூற்றுப்படி, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24ம் திகதி நடைமுறைக்கு வர வேண்டும். … Read more

உணவுப் பொருட்கள் பதுக்கல்:தடுக்க புதிய சட்டம்

அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். அரிசி ஆலைகள் மற்றும் பாரிய நெல் களஞ்சியசாலை உரிமையாளர்கள் எதிர்காலத்தில் உணவுப்பொருட்களை சேமித்து வைப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை இயற்றும் என்றும் பிரதமர் கூறினார். வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி வைக்கப்படுவதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பிரதமரிடம் தெரிவித்தார். அரசாங்கத்தின் … Read more

இலங்கை ஜனாதிபதிக்கு பிறந்தநாள் கடிதம் அனுப்பிய சீன ஜனாதிபதி

சீன ஜனாதிபதி ஷிஜின்பிங், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு பிறந்தநாள் கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு எதிராக “சுதந்திரம், தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர ஆதரவு” ரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் உணர்வை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. 🇨🇳President #XiJinping sent a birthday letter to 🇱🇰President @GotabayaR Rajapaksa and underlined the spirit of the Rubber-Rice Pact “independence, self-reliance, unity … Read more

சவூதி தூதுவருடன், அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை

அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று முன்தினம் (15) இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் அப்துல்லா எ,எ, ஒர்கோபியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் சந்தர்ப்பமாக இப்பேச்சுக்கள் அமைந்திருந்தன. அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேனா ஹெட்டியாராய்ச்சி மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரியான ரி,ஷற்,ஏ சம்சுடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால் அடையக்கூடிய அதிகளவான … Read more

இலங்கையில் மற்றுமொரு வைரஸ் தொற்று – 14 பேர் உயிரிழப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலும் இன்புளுவன்சா தொற்றினால் 14 நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இலங்கையில் வருடாந்தம் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இன்புளுவன்சா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தொற்று நோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சமித கினிகே கூறினார். தற்போது பரவுகின்ற இந்த வைரஸ் இன்புளுவன்சா “A” வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் … Read more

7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியர்: சம்பவத்தை மறைக்க முயற்சித்த நிர்வாகம்

யாழ்ப்பாண பிரபல பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்து துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிகிச்சை  கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிய மாணவிக்கு உளநல மருத்துவ வல்லுநரினால் உளநல சிகிச்சை வழங்கப்பட்டது என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவியின் குடும்பத்துக்கு பண உதவியை வழங்கி இணக்கமாக முடிக்க … Read more

Startup Genome – இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர்; வழங்கும் உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் அறிக்கை 2022

Startup Genome மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்; வழங்கும் உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் அறிக்கை 2022 தொடக்க மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை வளப்படுத்துவதில் உலகின் மிக முக்கியமான அறிக்கைiயில் இலங்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மலிவுதிறன் கொண்ட உலகின் 5 வது சுற்றுச்சூழல் அமைப்பாகவும் ஆசியாவின் 2 ஆம் அமைப்பாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.