விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவு தொகை

2021 (2022) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்காக செலுத்தப்படும் கொடுப்பனவு தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார். அதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ளும் மதிப்பீட்டுக் குழுவுக்கு, ஒரு விடைத்தாளுக்கு செலுத்தப்படும் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, பரீட்சை நிலைய ஊழியர்கள் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான நாளாந்த செலவை கருத்திற் கொண்டு அதனை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக … Read more

உணவுக்காக தேங்காய் பறிக்க சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

வீட்டில் உணவை சமைப்பதற்காக தேங்காய் ஒன்றை பறிக்க சென்ற ஒருவரை, தோட்டத்தின் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் தேங்காய் பறிக்க சென்ற நபர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொச்சிக்கடை தளுபத என்ற பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளம் நபரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இந்த இளைஞன் நேற்று பிற்பகல் 2.15 அளவில் அனுமதியின்றி தென்னந்தோட்டத்திற்குள் சென்று தேங்காய் பறித்துள்ளார். அப்போதே உரிமையாளரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். … Read more

இலங்கையின் அந்நிய செலாவணி அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் அந்நிய செலாவணி 34 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களின் அனுப்பப்படும் அந்நிய செலாவணி தொகை இவ்வாறு அதிகரித்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் பதிவான 249 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இலங்கையர்கள்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், முகவர் நிலையங்கள் ஊடாக 47 ஆயிரத்து 692 … Read more

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு விசேட ரயில் சேவை

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கிடையில் விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட உள்ளது கல்கிசையிலிருந்து காங்கேசன்துறைக்கு நகரங்களுக்கு இடையேயான இரவு நேர கடுகதியே இவ்வாறு சேவையில் ஈடுபடவுள்ளது. நாளை இந்தச் சேவை ஆரம்பிக்கப்படும். இந்த ரயில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்; கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை – பம்பலப்பிட்டி, கொழும்பு, பொல்கஹவலை, குருநாகல், அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு, அதிகாலை 5.25க்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்;. பின்னர் அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு கோண்டாவில், சுன்னாகம் ஊடாக … Read more

புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில்…

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை இனங்கண்டு, அதில் தேவையான … Read more

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்! நிறுத்தப்படும் நடைமுறை

ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.   இதன்படி,  ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. மீறப்படும் வரையறை நாளாந்தம் விண்ணப்பிக்கப்படும் வரையறை மீறப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க … Read more

10 வருடங்களின் பின்னர் மேல் மாகாணத்தில் 'டெங்கு' 50 வீதத்தால் அதிகரிப்பு

10 வருடங்களின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நுளம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார். மேலும், நாடளாவிய ரீதியில் நுளம்பு பெருகும் பிரிட்டோ சுட்டெண் தற்போது 20ஐ தாண்டியுள்ளது. இந்த நிலைமை டெங்கு தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக குறிப்பிடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், நுளம்பின் முட்டை வரட்சியான காலநிலையில் ஒரு வருடத்திற்கும் மேல் இருக்கும். மேலும் அந்த முட்டை தண்ணீருடன் சேரும் போது … Read more

குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தம்) ,சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம்

பாராளுமன்றத்தில் அடுத்தவாரம் இரண்டாவது வாசிப்புக்கு உட்படுத்தப்படவுள்ள குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் சிவில் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றுக்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனை குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியது. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. குற்றவியல் … Read more