எரிபொருள் வழங்குவதில் இனி புதிய நடைமுறை

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் வழங்குவதற்கு புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.  இதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருள் விநியோக முறைமைக்கு அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  பொதுமக்களுக்கான விழிப்புணர்வு எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். எடுத்துக்காட்டாக, 100 லிட்டர் ரேஷன் அட்டை வைத்திருப்பவர் ஒரு … Read more

கோப் குழுவின் அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி

கடந்த மார்ச் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 23ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 530 மணிவரை நடைபெறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. … Read more

தொழிலாளர் பிரச்சனைகளை விரைந்து தீர்க்க புதிய சட்டமூலம்  

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், கௌரவ மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் அண்மையில் (10) கூடிய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது, ​​கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின்படி, ஒரு ஊழியர் தனது தொழிலை இடைநிறுத்தும் சந்தர்ப்பங்களில், அந்த செயன்முறையை நிறைவுறுத்துவதற்கு மாத்திரமே தொழிலாளர் நியாயசபையின் கீழ் வழக்குத் தொடரப்படுகிறது. ஆனாலும், பணிபுரியும் ஊழியர்களின் … Read more

எரிவாயு இல்லை! லிட்ரோவின் புதிய அறிவிப்பு

எரிவாயுவைப் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.   அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிவாயு  கொள்கலன்கள்  விநியோகிக்கப்படுவதால், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் என  அந்த நிறுவனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு நேற்று முன்தினம் தரையிறக்கப்பட்ட எரிவாயு தகனசாலை, மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விநியோகிக்கப்படும். குறித்த கையிருப்புக்கள் தீர்ந்த பின்னர் இதுவரை புதிய எரிவாயு கொள்வனவுக்கான உத்தரவு எதுவும் … Read more

மட்டக்களப்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கு அமைய மட்டக்களப்பு நகர் மற்றும் நகர் பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகளில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்ட நடவடிக்கை மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் … Read more

மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுகின்றது

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் மின்வெட்டு நேரத்தினை நீடிக்க வேண்டியேற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  அத்தியாவசிய திருத்தப்பணிகள்  நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை மறுதினம் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கியின் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ஜப்பானுடனான உறவுகளின் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்தல்

மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வின் பக்க அம்சமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜப்பானின் வெளிவிவகார பிரதி அமைச்சர், பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார அமைச்சர் மற்றும் ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தூதுவர்கள் / நிரந்தரப் பிரதிநிதிகளை சந்தித்தார். ஜப்பானின் வெளிவிவகாரங்களுக்கான பாராளுமன்ற துணை அமைச்சர் மியாகே ஷிங்கோவுடனான இருதரப்பு சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் பரஸ்பரம் ஆதரவான நட்புறவைக் … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிதமான அலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஜூன் 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது … Read more

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொதி

கைக்குண்டு கண்டுபிடிப்பு நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள பாதைப் பகுதியில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்பட்டுள்ள நிலையில் அதில் கைக்குண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரை வரவழைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்துவதற்காக எமது செய்திப்பிரிவு பொலிஸாரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் அழைப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  Source link

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்…

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டது. நேற்று (15) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்ற நீர்வழங்கல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியின் கீழ் செயற்படுத்தப்படும் நீர் திட்டங்களின் முன்னேற்றம் … Read more