எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை – லிட்ரோ தலைவர் அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் தேவையான சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் லிட்ரோ நிர்வாகத்திடம் இல்லை என்று இதனை தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். லிட்ரோ நிறுவனத்தில் தலைவராக நேற்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில், எதிர்வரும் வாரங்களுக்கு இறக்குமதி எதுவும் திட்டமிடப்படாததால், சமையல் எரிவாயு விநியோகத்தில் உருவாக்கப்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பது கடினம் என்று அவர் குறிப்பிட்டார். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட முன்னாள் தலைவர் லிட்ரோவின் முன்னாள் … Read more

மற்றுமொரு உணவுப் பொருளின் விலை அதிகரிப்பு

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மீண்டும் உயரும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  கால்நடை தீவனப் பற்றாக்குறையால் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.  அதிகரிக்கும் நெருக்கடி மற்றும் விலை இந்த நாட்களில் சந்தையில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவுக்கும் மேல் உள்ளது.  அத்துடன் முட்டை ஒன்றின் 47.50 ரூபா என்ற போதிலும்,  சில … Read more

இலங்கையில் மற்றுமொரு நெருக்கடி – அரிசிக்காக நீண்ட வரிசை

நாட்டின் பல பகுதிகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சில கடைகளில் விற்பனை செய்வதற்கு போதுமான அளவு அரிசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரிசிக்கு தட்டுப்பாடு அரிசிக்காக கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் வழங்குனர்களினால் இதுவரை விநியோகம் செய்யவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விற்பனையாளர்கள் அரிசிகளை பதுக்கி வைத்துள்ளமையினால் இந்த பற்றாக்குறையை உருவாகியுள்ளது. இதேவேளை, சுப்பர் மார்க்கெட், சதோச விற்பனை வலையமைப்பில் அரிசி விநியோகத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாடிக்கையாளருக்கு அரிசி எத்தனை … Read more

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.  ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.  எரிவாயு விலை அதிகரிப்பு இதன்போது அவர் கூறுகையில், லாஃப்ஸ் எரிவாயுவின் விலைக்கு நிகராக லிட்ரோ எரிவாயுவின் விலையும் உயர்த்தப்படும் என வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.  அத்துடன் எரிவாயுவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்குமாறு பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை … Read more

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 யூரியா மூட்டைகள் இலவசமாக வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது. விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இலங்கை … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இலங்கையின் சமூகப் பொருளாதார பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்

மனித உரிமைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளரை சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 ஜூன் 14ஆந் திகதி ஜெனீவாவில் பிரேசிலுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார். மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் அர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. ஃபெடரிகோ வில்லேகாஸ் உடனான சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய சமூகப் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் … Read more

தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம்! பிரித்தானிய பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது அத்துடன், ரயில் சேவைகள் 07:30 மணி முதல் 18:30 … Read more

இலங்கையில் தொடரும் நெருக்கடி – உயிரை பணயம் வைத்து ரயிலில் பயணிக்கும் மக்கள்

நீண்ட வார விடுமுறைக்கு பின் நேற்று (15ம் திகதி) அலுவலக நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பித்துள்ள நிலையில், ​​போதிய பேருந்துகள் இல்லாததால், ரயில்களில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பயணிகள் மிகவும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. பிரதான மார்க்கம் மற்றும் கடலோரப் பாதையில் உள்ள ரயில்களில் நெரிசல் அதிகமாக இருந்ததால், பயணிகள் பாதையோரத்திலும் மேற்கூரையிலும் பயணம் செய்வதைக் காண முடிந்தது. பிரதான வீதி, கரையோர வீதி, களனி வீதி மற்றும் புத்தளம் வீதியில் பல ரயில்கள் இரத்துச் … Read more

அரசாங்கம் கூறியது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை – சஜித் சாடல்

சுதந்திர தினம், வெசாக் தினம், பொசன் தினம் போன்ற தினங்களில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என அரசாங்கம் கூறியது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று (ஜன. 15) காலை ரஞ்சன் ராமநாயக்கவைச் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தனது உயர்கல்வியின் வெற்றியுடன் நாட்டுக்கு வினைத்திறனுடனும் அர்த்தத்துடனும் சேவையாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவேன் … Read more