கடும் பொருளாதார நெருக்கடி – தினசரி உண்ணும் உணவின் அளவை குறைத்த இலங்கை மக்கள்

இலங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் ஏப்ரல் மாதம் முன்னெடுத்த கூட்டு விரைவான உணவு பாதுகாப்பு மதிப்பீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை கருத்திற்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டள்ளது. இதன்படி, 86 சதவீதம் பேர் மலிவாக வாங்குதல் போன்ற சமாளிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். 95 சதவீதம் பேர் குறைவான சத்தான உணவுகளை … Read more

இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ள காத்திருப்போருக்கான தகவல்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன இணைத்தளம் மற்றும் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்  இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களைத் தவிர ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.   Source link

செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்

கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்  வெள்ளிக்கிழமை (10) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. வருடாந்தம் ஆறு கிராம மக்களால் மிகவும் தொன்று தொட்டு கண்ணகை அம்மன் ஆலத்தில் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன. சிவஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார்களால் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும். கடந்த இரண்டு வருடங்களாக கொவிட்  காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட … Read more

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா – 2022

மட்டக்களப்பு மாவட்ட  2022  கூடைப்பந்தாட்டப் போட்டியில் இம்முறை மண்முனை வடக்கு பிரிவின் ஆண்கள் அணியினர் சம்பியனாக தெரிவானதுடன், பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் ஏறாவூர்ப்பற்று பெண்கள் அணியினர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர். அதே வேளை பெண்களுக்கான வலைப்பந்து போட்டியில் மண்முனை வடக்கு அணியினர் இரண்டாம் இடத்தினையும், கூடைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஏறாவூர்ப்பற்று ஆண்கள் அணியினர் இடண்டாம் இடத்தினையும் பெற்றனர். மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வே.ஈஸ்பரன் தலைமையில், வெபர் விளையாட்டு மைதான வளாகத்திலும் புனித மிக்கேல் … Read more

பாணின் விலை 1,500 ரூபாவாக உயரும் சாத்தியம்! வரலாறு காணாத விலை உயர்வு டிசம்பருக்குள்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது போல பணவீக்கம் தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதத்திற்குள் சராசரியாக ஒரு இறாத்தல் பாண் 1500 ரூபாவாக இருக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தானது  தற்போது 100 ரூபாவில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்வது டிசம்பர் மாதத்தில் 1,790ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உயர் பணவீக்கம் மிகவும் ஆபத்தான … Read more

அனைத்து அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலாக்க நடவடிக்கை…..

வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்களையும் மேலும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும். இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். … Read more

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இல்லாமல் போகலாம்! வெளியானது அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் சந்தையில் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி மற்றும் அரிசி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், காய்ந்த மிளகாய், கடலை, நெல்  தட்டுப்பாடு ஏற்படலாம் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்டுள்ள விநியோகம்  அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதியில் பயன்படுத்தப்படும் திறந்த கணக்கீட்டு முறையை மே 06 ஆம் திகதி முதல் இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.  திறந்த கணக்கீட்டு முறை இல்லாதொழிக்கப்பட்டதன் … Read more

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த – பரபரப்பாகும் தென்னிலங்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் மாத்திரமே 21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மகிந்த முன்வைத்துள்ள நிபந்தனை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்காத வரையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது … Read more

தனது சம்பள நிலுவையை சுகாதார அமைச்சுக்கு வழங்கிய வைத்தியர் ஷாபி! முன்னாள் ஜனாதிபதியின் செய்தி

குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் ஷாபி ஷிகாப்தீன் தான் பணி இடை நிறுத்தப்பட்டிருந்த காலத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட வேதனத்தை அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்கியுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூக ஊடக பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொறாமை, வெறுப்புணர்வை போர்த்திக்கொண்ட சிங்கள தீவிரவாதத்தின் வெட்கக்கேடான அத்தியாயம் சிறந்த தொழில்சார் நிபுணரின் வாழ்வை சிதைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். வைத்தியர் ஷாபிக்கு பாராட்டுக்கள்  வைத்தியர் ஷாபி மீது … Read more

எரிபொருள் விநியோகம் செய்வதில் இன்று முதல் புதிய நடைமுறை

 முன்பதிவுகளுக்கு அமைய, கொடுப்பனவு செலுத்தப்பட்ட பின்னர் மாத்திரம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை கொண்டு செல்லும் புதிய முறைமை  இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அகில இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள காசோலை வசதி உடனடியாக நிறுத்தப்பட்டு, பணம் செலுத்தப்பட்ட பின்னர் எரிபொருளை விநியோகிக்கும் முறைமையே நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார். ஒரே தடவையில் பணம் செலுத்தும் முறை கைவிடப்பட்டது … Read more