பொசொன் பெளர்ணமி தினத்தில் வழங்கப்பட்ட வித்தியாசமான தானம்

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினம்  பௌத்த மக்களின் புனித நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.  இந்த தினங்களில் பௌத்த மக்கள் தானம் வழங்கி வருவது வழமை.  குறிப்பாக உணவு தானம், ஐஸ் கிறீம் தானம், குளிர்பான தானம் என பல்வேறு தானங்கள் வழங்கப்பட்டு வருவது வழமை. வித்தியாசமான தானம் எனினும், நேற்று அனுஷ்டிக்கப்பட்ட பெளத்த மக்களின் முக்கிய தினமான பொசொன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஹொரணையில் வித்தியாசமான முறையில் தானம் ஒன்று இடம்பெற்றது. தலைமுடியை வெட்டுவதற்கான தானம் … Read more

கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழர்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Vancouver சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கையை சேர்ந்த தமிழருடையது எனவும், 64 வயதானவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த மாத ஆரம்பத்தில் காணாமல்போனதாக கூறப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  ரோயல் கனேடியன் மவுன்ட் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட தகவல் மேலும், கடந்த மாதம் 9ஆம் திகதி காணாமல் போனதாக முறையிடப்பட்டபோது அவர் அதிக போதையில் இருந்ததாகவும் … Read more

இன்று எரிபொருள் பெற்றுக் கொள்ள காத்திருப்போருக்கான தகவல்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன இணைத்தளம் மற்றும் செயலி ஆகியவற்றின் மூலம் இன்று எரிபொருள் விநியோகிக்கப்படும் நிலையங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   மட்டுப்படுத்தப்பட்ட எரிவாயு விநியோகம்  இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களைத் தவிர ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசைகளில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.   Source link

எரிபொருள் நெருக்கடி: இன்று தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம்,காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவை வார இறுதி நாட்களில்

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று (15) தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகள் குறித்து தெரிவிக்கையில் ,தற்சமயம் ஆகக்கூடுதலானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றார்கள் ,இதனால் புதிய திட்டத்தின் கீழ் ஆகக்கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். கொழும்பில் இருந்து கண்டிக்கான சொகுசு ரயில் சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. களனிவெலி ரயில் பாதையில் இன்று புதிய அலுவலக ரயில் … Read more

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டமைக்கான காரணம்

எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் இந்த வாரம் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்படுகின்றது. அதற்கான சுற்று நிருபம் இன்று இரவு வெளியிடப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய வர்த்தமானி இதேவேளை, விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.  பல தசாப்தங்களில் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடும் … Read more

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போதே அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துறையாடல் நேற்று இடம்பெற்றது.இதன் போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். எதிர்வரும் 6 மாதங்களில் ஆகக்கூடுதலான இந்திய சுற்றுலாப் … Read more

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

2022 ஜூன்15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு, 2022 ஜூன் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய … Read more

பொதுமக்களுக்கான அறிவிப்பு! இன்று முதல் விற்பனை

11 நாட்களுக்குப் பிறகு இன்றைய தினம் முதல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  முதன்மையாக வணிக நிலையங்கள், தகன நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டு பாவனைக்கான எரிவாயு விநியோகம்  குறைந்த எண்ணிக்கையிலான வீட்டு பாவனைக்கு  எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த கப்பலில் இருந்து கடந்த  ஆறு நாட்களின் பின்னர், எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. … Read more

மேல் மாகாணத்தில், டெங்கு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

மேல் மாகாணத்தில் இன்று (15) தொடக்கம் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகக்கூடுதலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து இந்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டிடங்களை நிர்மாணித்தல், தொழிற்சாலைகள், கழிவுப்பொருட்களை அகற்றுதல், நீரை சேமித்து வைக்கும் பீப்பாய்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள், வாளி, பூச்சாடிகள் மற்றும் அகற்றப்படும் பொருட்கள் முதலானவை டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் என டெங்கு குடம்பி விஞ்ஞான ஆய்வு மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. நாட்டின் 16 மாவட்டங்களில் உள்ள 83 … Read more