விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கம் – இலங்கை அரசு

விடுதலைப் புலி ஆதரவாளர்கள் 318 பேருக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான 318 நபர்கள் மற்றும் 4 அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்த அரசாங்கம் நீக்கியுள்ளது. எவ்வாறெனினும் இவ்வாறு தடை நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிடவில்லை. புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 புலிச் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக … Read more

யாழ். – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும்,பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் நேற்று (13.06.2022) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணெய் ,டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் … Read more

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் யோசனை 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது கட்சி உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மகிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். 21வது திருத்தம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு … Read more

காகிதம் மற்றும் அச்சிடும் பொருட்களுக்கு 65 மில்லியன் டொலர் தேவை – கல்வி அமைச்சு

அடுத்த வருடத்திற்கான காகிதம் மற்றும் அச்சுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கை காகிதத்தை இறக்குமதி செய்வதாகவும் உள்நாட்டில் காகிதத்தை உற்பத்தி செய்வதில்லை எனவும் தெரிவித்தார். எம்பிலிப்பிட்டி மற்றும் வாழைச்சேனை தொழிற்சாலைகளில் இதற்கு முன்னர் உற்பத்தி இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார். அச்சகங்கள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்துடன் பேசி அடுத்த வருடத்திற்கான தேவைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், இந்த … Read more

வெள்ளிக்கிழமைக்குள் தனியார் பேருந்துகள் சேவைகள் நிறுத்தப்படலாம் – வெளியாகியுள்ள தகவல்

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடருமானால் வெள்ளிக்கிழமை (17) வரை தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன, அனைத்து பேருந்து உரிமையாளர்களும் சேவையில் இருந்து விலக நேரிடலாம் என தெரிவித்துள்ளார். “20 வீத தனியார் பேருந்துகள் (4,000 பேருந்துகள்) நாளை (15) மற்றும் வியாழன் (16) ஆகிய இரு தினங்களில், கையில் இருக்கும் எரிபொருளைக் கொண்டு … Read more

உகண்டா நாட்டிற்கு அடித்த அதிஷ்டம்:கண்டுபிடிக்கப்பட்டுள்ள 12 ட்ரில்லியன் டொலர் பெறுமதியான தங்கம்

அண்மைய காலத்தில் நடத்திய கனிய வள ஆராய்ச்சியில் 12 ட்ரில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான 31 மில்லியன் தொன் தங்கத்தை கொண்டுள்ள கனிய மண் வளத்தை கண்டுபிடித்துள்ளதாக உகண்டா அரசாங்கம் அறிவித்துள்ளது. தங்க மண் இந்த தங்கத்தை அகழ்ந்து அதனை பிரித்து எடுப்பதற்கு அதிகளவிலான முதலீட்டாளர்களை கவர்வது அவசியம் எனவும் உகண்டா கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பூகோளவியல், புவி இரசாயன மற்றும் ஆராய்ச்சிகளின் பின்னர் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வான் பரப்பின் ஊடான தேடுதல்களுக்கு அமைய … Read more

உண்மையினை சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை (Photos)

சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த உண்மையினை சாதாரண சிங்கள மக்கள் விளங்கிக்கொண்டு தமிழ்த் தேசத்தினை அங்கீகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.  மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியை உலுக்கிய மகிழடித்தீவு படுகொலை நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வு  1987 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் … Read more

நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டு – இளைஞர்களுக்கு கிடைத்துள்ள புதிய தொழில்

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் நேற்றும் எரிவாயு விநியோகிக்கப்படாமையால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டினுள் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களினுள் மிகப்பெரிய எரிவாயு வரிசைகளை நேற்று நாடு முழுவதும் காண முடிந்துள்ளது. நீண்ட நாட்களாக காத்திருக்கும் மக்கள் பல பிரதேசங்களில் சிலிண்டர்களை ஒன்றாக தொடர்புப்படுத்தி வாடகைக்கு பாதுகாக்கும் முறை ஒன்றையும் காண முடிகின்றது. இரவு நேரங்களில் ஒரு சிலிண்டரை பாதுகாக்க 100 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு கிடைத்த புதிய … Read more