அரச ஊழியர்கள் வெளிநாட்டில் தொழில் புரிய விடுமுறை

அரச ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் தொழில் புரிய அல்லது வேறு பலன் தரக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபவதற்காக 5 ஆண்டுகளுக்கு சம்பளத்துடன் வெளிநாட்டு செல்லக் கூடிய விடுமுறையை வழங்கும் வகையில் சட்டத் திருத்தங்களை செய்து, சுற்றறிக்கை ஆலோசனையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லை நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு சிரேஷ்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு வராத வகையில் சட்டத் திருத்தங்களை செய்து, சுற்றறிக்கையை வெளியிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான யோசயை அரச … Read more

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அரிசித் தொகையின் முதல் தொகுதி

மனிதாபிமான உதவியின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அரிசித் தொகையின் முதல் தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த அரிசித் தொகை எதிர்வரும் சில தினங்களுக்குள் இலq;கைக்கு கிடைக்கும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாணும் நோக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீன வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சீனா வழங்கும் ஐம்பது கோடி யுவான் மனிதாபிமான நிதியுதவி மூலம் இலங்கைக்குத் தேவையான ஒரு தொகை மருந்துகள் கடந்த தினம் கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் மீண்டும் எரிவாயு விநியோகம்: லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை

நாளை நண்பகல் தொடக்கம் மீண்டும் எரிவாயு விநியோகம் நடைபெறும் என்று லிட்ரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த எட்டாம் திகதி 3900 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்த கப்பலுக்கான 2.5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகை மற்றும் தாமதக் கட்டணம் என்பன இன்று காலை லிட்ரோ நிறுவனத்தினால் செலுத்தப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை காரணமாகக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகக் குறித்த கப்பல் ஒருவாரமாக கொழும்புத்துறைமுக கடற்பரப்பில் தரித்து நிற்க நேர்ந்திருந்தது. கப்பலிலிருந்து எரிவாயு … Read more

நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவம் பல பதக்கங்களை வென்றது

46வது தேசிய வயதுப் பிரிவு நீச்சல் சம்பியன்ஷிப்- 2022 போட்டியிடும் இலங்கை இராணுவத்தின் வீரர்கள் பல பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு புதிய தேசிய சாதனையை யும் படைத்துள்ளனர். கொழும்பு சுகததாச நீச்சல் தடாகத்தில் இம்மாதம் (ஜூன்) 8 முதல் 11 வரை நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவின் 2வது லெப்டினன்ட் எச்.டி.ஏ.பீரிஸ் 50 மீ பேக் ஸ்ட்ரோக் போட்டியை 26.24 வினாடிகளில் முடித்து ஒரு புதிய தேசிய சாதனை படைத்துள்ளார். இதேவேளை 5 … Read more

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை: அமைச்சரவை அனுமதி

அரச ஊழியர்களுக்கு வாரந்தோரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும்,நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று (13) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 07. பயிர்செய்கை மற்றும் விவசாய … Read more

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வரி! பிரதமரின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. … Read more

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக திருத்தி அமைக்கப்பட்ட சுற்றறிக்கை

பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கை, அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி, அடுத்த வருடத்திலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வது இந்த சுற்று நிருபத்திற்கு அமைய இடம்பெறும். பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினைகளை குறைப்பதற்காகவே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து புதிய சுற்றறிக்கை … Read more

இலங்கை – இந்தியாவிற்கான போக்குவரத்தினை மேற்கொள்ள இணக்கப்பாடு

யாழ். பலாலி விமான நிலையத்திலிருந்து திருச்சிக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் அதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட போதும் கூட தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை.  இந்த நிலையில் பலாலி விமான நிலையத்தை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்ய முடியுமா என்பனை பார்வையிட விமான சேவைகள் அமைச்சர் விரைவில் பலாலி வருவதாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் … Read more

பொசன் நோன்மதி தினம் இன்றாகும்

பொசன் நோன்மதி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இலங்கையின் பல பகுதிகளிலும் முக்கிய பௌத்த வழிபாட்டு தலங்களில் விசேட நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. விகாரைகளில் பல்வேறு தான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அசோக சக்கரவர்த்தியின் மகனான அரகாத் மஹிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்து பௌத்த போதனைகளை வழங்கிய முதல் நாளாக இந்த நாள் கருதப்படுகின்றது. அதுமாத்திரமின்றி பௌத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினமே பொசன் தினமாகவும் குறிப்பிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . மகிந்த தேரர் முதன் … Read more