நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை: வாகன பாவனை விடயத்தில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் – செய்திகளின் தொகுப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கக் குறிப்பிட்ட சில வாகனங்களின் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய,மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கும் அதிக எரிபொருள் பாவனையுடன் கூடிய வாகனங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கமைய, பொது போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,  Source link

இலங்கையில் மோசமாகும் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு – வெளியாகியுள்ள தகவல்

எதிர்வரும் நாட்களில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு அதிகரிக்கும் என பெட்ரோலிய கூட்டுத்தாபன உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, நாட்டில் எரிபொருள் வரிசைகள் மேலும் நீடிக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றைய நிலவரப்படி 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 10,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் சுமார் 350 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 800 மெட்ரிக் தொன் டீசல் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அந்த அளவுகள் அன்றாட … Read more

ஆதி காலத்தில்,நமது மக்கள் ஒன்றிணைந்து, இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாகவே சவால்களில் வெற்றி பெற்றனர்

ஆதி காலத்தில், நமது மக்கள் ஒன்றிணைந்தும் மற்றும் பொதுவான இணக்கப்பாட்டின் அடிப்படையிலும் செயற்பட்டதன் காரணமாகவே சவால்களில் வெற்றி பெற்றனர் என்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.   பொசன் நோன் மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விடுத்துள்ள பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு: பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி புதிய அர்த்தமுள்ள அடையாளத்தையும் கலாசார மறுமலர்ச்சியையும் உருவாக்கிய, மஹிந்த தேரரின் வருகை இடம்பெற்ற … Read more

அரச ஊழியர்களுக்கான விடுமுறை! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் வெளியாகியுள்ளது. அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.  எரிபொருள் நெருக்கடி தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.  அரச ஊழியர்களுக்கு விடுமுறை! வெளியான புதிய அறிவிப்பு  இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.  என்றபோதும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது … Read more

கொழும்பில் நாளை முதல் அறிமுகமாகும் புதிய சேவை

கொழும்பில் நாளை முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பேருந்துகள் பயணிக்கவுள்ளன. மாலை 4 மணி முதல் 6 மணி வரை கொழும்பில் இருந்து மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த வரை பேருந்து பயணிக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல … Read more

கொழும்பை அண்மித்த பகுதிகளில் சிறுவர்களிடையே பரவும் காயச்சல் – வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்து வருகின்றது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பள்ளி சிறுவர்கள் மத்தியில் இந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார். ஒரு குழந்தைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அந்த நிலை விரைவாக பரவக்கூடும் என்பதால், அவர்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளர். காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் … Read more

பொசன் போயாவை முன்னிட்டு 173 கைதிகள் விடுதலை

பொசன் போயாவை முன்னிட்டு 173 சிறை கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர். நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் பரிந்துரையின் பேரில் இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, அபராதம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக 141 கைதிகளையும், 14 நாட்கள் குறைக்கப்பட்டதால் 32 கைதிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் சிறையிலிருந்தும் கைதிகள் விடுதலை குருவிட்ட, மஹர, நீர்கொழும்பு, வீரவில, வாரியபொல, போகம்பர, அநுராதபுரம், … Read more

கடும் நெருக்கடியில் இலங்கை – ரணிலுடன் பேசிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார். இந்த சவாலான நேரத்தில் இலங்கை மக்களுக்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பு, ஜனநாயக ஆட்சி மற்றும் மனித உரிமைகள் உட்பட அனைத்து இலங்கையர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்களை ஆதரிப்பதன் முக்கியத்துவத்தையும் செயலாளர் உறுதிப்படுத்தினார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும் … Read more

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு

அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம் மற்றும் நீதியை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) இலங்கையை வலியுறுத்தியுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான உடனடி நிவாரணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தும்போது சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் … Read more