இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக திரு. ஜே. யோகராஜ் நியமனம்

வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இன்று (13) நியமித்தார். இதன் போது ,இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் தலைவர் ,பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமித்தார்  இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான திரு. ஜே. யோகராஜ் தனது நியமனக்கடிதத்தை அமைச்சரிடம் பெற்றுக்கொண்டார். இது தொடர்பான நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சில் இன்று … Read more

கொழும்பில் புதிய நகர்வு! இலங்கைக்காக சந்தித்துக்கொண்ட அமெரிக்காவும் சீனாவும்

இலங்கைக்காக அமெரிக்காவும் சீனாவும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான வழிகள் குறித்து அமெரிக்காவும் சீனாவும் இன்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹொங்கை இன்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தில் சந்தித்தார். நட்பு ரீதியான பேச்சு Met with PRC Ambassador Qi Zhenhong about the political and economic situation in SL. Interesting to share ideas about trade, investment, and development, as … Read more

கொழும்பிலும் ,அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா Influenza

கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா Influenza நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுவர்கள் நோய் தொடர்பான விசேட  வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா, குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். காய்ச்சல், உடல்வலி, இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் நோய்க்கான அடிப்படை அறிகுறிகளாகும் என டாக்டர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார். சிறுவர்கள் மத்தியில் இந்நோய் எளிதில் பரவக்கூடியது.இதனால்  சிறுவர்கள மற்றும் பெரியவர்கள் … Read more

2022 ஜூன் 13ஆந் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை

2022 ஜூன் 13ஆந் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை தலைவர் அவர்களே, எமது முன்னேற்றம் மற்றும் சவால்களை திறந்த பரிமாற்றத்தில் இலங்கை தொடர்ந்தும் இந்த சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய உறுப்புக்களுடன பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் திறந்த மனப்பான்மையிலேயே, தற்போதைய சபை அமர்வில் நான் இந்த உரையை ஆற்றுகிறேன். அண்மைய வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் பாரதூரமான … Read more

எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா பங்கேற்றுள்ளார். எதிர்க்கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பின் பேரில் தான் கலந்துரையாடலில் கலந்து கொண்டதாக  கொடஹேவா தெரிவித்தார். கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த கூட்டத்தின்போது போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலேயே தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ரவூப் ஹக்கீம், … Read more

வெளிநாட்டுத்துறைச் செயலாற்றம் – 2022 ஏப்பிறல்

2022 ஏப்பிறலில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் இறக்குமதிச் செலவினம் குறைவடைந்த அதேவேளையில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்து காணப்பட்டது. சுங்கத்திலிருந்தான தற்காலிகமான தரவுகளின்படி, இறக்குமதியில் ஏற்பட்ட இக் குறைவானது 2022 மேயில் வேகத்தை கூட்டியுள்ளது. இதன் விளைவாக வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022 ஏப்பிறலில் மிதமான செயலாற்றமொன்றினைக் காண்பித்தன. இருப்பினும், 2022 … Read more

இலங்கையில் எதிர்காலம் மிகவும் ஆபத்தானது! சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாய நிலை(Video)

எதிர்காலம் மிகவும் ஆபத்தானது, இலங்கை மக்கள் ஒவ்வொருவரும் சாப்பிடாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு போன்றவற்றால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் சிதைந்து வருகின்றது. இது தொடர்பில் எமது குழுவினர் பொது மக்களின் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். பொதுமக்களின் கருத்துக்கள்… வாழ்வா சாவா என்ற நிலையில் இலங்கை மக்கள்  நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்து வரும் நிலையில் இலங்கை மக்கள் வாழ்வா … Read more

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்களின் மூலம் அரச ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்கள் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (13) வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் தலைவர் : அசங்க பிரியநாத் ஜயசூரிய அவர்கள்  பணிப்பாளர் சபை: • பேராசிரியர் திரு. சமிந்த ரத்னாயக அவர்கள் … Read more

இலங்கையில் மூடப்படும் பழக்கடைகள்

கொழும்பு புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம். கடுமையான விலை உயர்வு உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.   Source link