மோடி தொடர்பில் சர்ச்சை கருத்து! திடீரென பதவி விலகிய இலங்கை மின்சார சபை தலைவர்
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். அந்த பதிவில் எம்.எம்.சி.பெர்டினாண்டோவின் பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்படி இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். சர்ச்சை கருத்து அண்மையில் நாடாளுமன்ற கோப் குழுவின் விசாரணை ஒன்றின் போது பெர்டினாண்டோ கூறிய கருத்துக்கள் உள்ளூர் அரசியலிலும், இந்தியாவிலும் அதிர்வலைகளையும், சர்ச்சையையும் … Read more