பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல்

வருடாந்த பாடசாலை கால அட்டவணையின்படி வழங்கப்படும் பாடசாலை விடுமுறைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரின் தகவல் வருடாந்தம் நடத்தப்பட வேண்டிய காலகட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விக்கு முன்னுரிமை அளித்து பள்ளிகளை நடத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேவேளை, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களை … Read more

சுவிற்சர்லாந்து: மெய்வல்லுனர்போட்டியில் சாரங்கி சில்வாவுக்கு தங்கப்பதக்கம்

சுவிற்சர்லாந்திலும் – இந்தியாவிலும்நடைபெறும் பல விளையாட்டுக்களில் இலங்கை வீர -வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நேற்று சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர்போட்டியில், சாரங்கி சில்வா மகளிர் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம்வென்றுள்ளார். இவர் 6.33 மீற்றர் நீளம் பாய்ந்துள்ளார்.   

மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பில் தாம் எந்த தரப்பினருக்கும் அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி தெரிவிப்பு…

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின் திட்டத்தை கையளிப்பது தொடர்பில் தாம் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அழுத்தங்களை விடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் தலைவர் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தெரிவித்த கருத்தை தாம் வன்மையாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இலங்கையின் கொள்கையானது ஒவ்வொரு செயற்திட்டத்தையும் மிகவும் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் உரிய முறைமையிலும் வழங்குவதாகும். இலங்கைக்கு மின்சக்தி அத்தியாவசியமாக உள்ள  இச்சந்தர்ப்பத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறை … Read more

தமிழர் பகுதியில் புத்தர் சிலை! தமிழ் மக்களின் எதிர்ப்பால் பௌத்த தேரர்களின் முயற்சி நிறுத்தப்பட்டது(Photos)

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளையும் மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்வதற்கும், அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கணக்கான பௌத்த பிக்குகள்  குறித்த பகுதியில் ஒன்று … Read more

உச்சத்தை தொடும் மீனின் விலை

சந்தையில் மீனின் விலை வெகுவாக உயர்வடைந்துள்ளது.   எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் தலபாத் ரூ.2,200, கொப்பரை ரூ.2,300 என்ற அடிப்படையில் ஒரு கிலோ மீன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  பருப்பின் விலையும் உயர்வு இதேவேளை, சந்தையில் ஒரு கிலோ பருப்பின் விலை 650 ரூபாவைத் தாண்டியுள்ளது. பருப்புக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் விதிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். Source link

அக்டோபர் மாதம் வரை ஐ.எம்.எப் நிதி கிடைக்காது! பிரதமர் – செய்திகளின் தொகுப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அக்டோபர் மாதம் வரை இலங்கைக்குக் கடன் கிடைக்க வாய்ப்பில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இருப்பினும் ஏனைய நட்பு நாடுகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியானது தவறான நிர்வாகம், வரி குறைப்பு மற்றும் உரப்பிரச்சினை போன்றவற்றின் காரணமாக ஏற்பட்டது என பிரதமர் தெரிவித்தார். இருப்பினும் கோவிட் தொற்று மற்றும் ரஷ்யா – உக்ரேன் யுத்தம் காரணமாக இந்நிலைமை மிக … Read more

தேசிய பொசன் தின நிகழ்வு ,அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் ஆரம்பம்

இம்முறை தேசிய பொசன் தின நிகழ்வு அனுராதபுரம், மிஹிந்தலை, தந்திரிமலை புனித பூமிகளை மையமாகக்கொண்டு இடம்பெறும். தேசிய பொசன் நிகழ்வின் அங்குரார்ப்பண வைபவம் அனுராதபுரம் ஜயசிறிமகாபோதியில் நேற்று ஆரம்பமானது. தேசிய பொசன் நிகழ்வு மிஹிந்தலைஇ அனுராதபுரம்இ அட்டமஸ்தானஇ தந்திரிமல புனித பூமிகளை மையமாகக்கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களுக்கு விடுமுறை! வெளியான புதிய அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன  இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி   நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   அடுத்த வாரத்தில் இருந்து இதை நடைமுறைப்படுத்த நம்புகிறோம். தற்போது, ​​எரிபொருள் விலையேற்றத்தால் … Read more

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த பலர் சிக்கினர்

நீர்கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு  சட்டவிரோதமாக சென்ற 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இயந்திர படகு ஒன்றின் மூலம்  சென்ற அவர்களை தென்கிழக்கு கடலில் வைத்து  இன்று அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.   கைது செய்யப்பட்டவர்கள் அம்பாறை பாணமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   கடற்படையினரின் சுற்றிவளைப்பு கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதன்போது, அவுஸ்திரேலியா  நோக்கி பயணித்துக் கொண்டிருந்த படகை கடற்படையினர் சுற்றிவளைத்து இடைமறித்து சோதனையிட்டபோது சட்டவிரோதமாக பயணித்த … Read more

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அவசர அறிவித்தல்! திடீரென எடுக்கப்பட்ட தீர்மானம்

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் ஒரு நாளின் அடிப்படையில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை சுமார் 2,000 ஆகும். அந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. … Read more