முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மறைவுக்கு அனுதாபப் பிரேரணை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணைக்கு நேற்று (10) முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஒதுக்கப்பட்டிருந்தது. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அனுதாபப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் தமது அனுதாபத்தை வெளியிட்டனர். 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் … Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையில் சில முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்கள் ரீதியில் செயற்படுத்துவதன் ஊடாக அதிக அரச ஊழியர்கள் கொழும்பிற்கு வருவதை குறைக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் அரச சேவை தொடர்பில் விசேட ஆய்வொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே குறித்த விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த உத்தரவையும் பிறப்பித்துள்ளார். குறைந்த ​நேரத்தில் ஆரோக்கியமான அரச சேவை அத்துடன், … Read more

இலங்கையில் பாரியளவில் அதிகரித்த முட்டையின் விலை

இலங்கை சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மக்காச்சோள தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் இந்த நிலைக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். முட்டையின் விலை அதிகரிப்பு விலங்கு தீனிக்காக வருடந்தாந்தம் 300 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது. இவ்வாறான நிலையில் மாதாந்தம் 30 மில்லியன் டொலராவது விலங்கு உணவிற்காக வழங்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். … Read more

இலங்கையில் முழுமையான மனிதாபிமான அவசரநிலை ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை

சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் சமகாலத்தில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், முழுமையான மனிதாபிமான நெருக்கடிக்குள் தள்ளப்படும் அபாயத்தில் இலங்கை உள்ளதாக ஐ.நா மனிதாபிமான அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. எரிபொருள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு, பணவீக்கம் மற்றும் அதன் நாணய மதிப்பின் வீழ்ச்சிக்கு மத்தியில் இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான நிதிக் நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அவசரநிலையாக உருவாகலாம் என்று கவலை 1948 இல் சுதந்திரத்திற்குப் … Read more

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஹரின்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதை ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியதுடன், அவர் வராமைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும், “கோட்டா கோ காமா” அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தான் ஆதரவளிப்பதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார். ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை … Read more

ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை அணியின் வீரர்கள்

உஸ்பகிஸ்தானில் ஆரம்பமான ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை அணியின்  வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் குழாம் 11ஆம் திகதி தாய்லாந்து அணியையும் , 14ஆம் திகதி மாலைதீவு அணியையும் எதிர்கொள்ளவுள்ளனர். போட்டிகள் அனைத்தும் உஸ்பகிஸ்தானின் மர்கஸிய் விளையாட்டரங்கில்  இடம்பெறவுள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணியை தயார்படுத்தும் வகையில், கடந்த மே 24ஆம் திகதி இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் உள்நாட்டிலும் கட்டார் நாட்டிலும் பயிற்சிகளை மேற்கொண்டனர். … Read more

எரிபொருள் இருப்பை சரிபார்க்க புதிய இணையதளம் அறிமுகம்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ICTA ஆனது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் இருப்பை சரிபார்க்க இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, தினசரி காலை 9.00 மணிக்கு எரிபொருள் இருப்பு மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும், அதன் பிறகு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இணையதளம் புதுப்பிக்கப்படும். எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருளை பெற்றுக்கொள்வதில் … Read more

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய திருவிழா: முன்னாயத்த கலந்துரையாடல்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய திருவிழா நடைபெறுவதற்கான சிறப்பான சேவையினை வழங்கும் பொருட்டான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (10.06.2022)  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்தரையாடலில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை, அம்புலன்ஸ சேவை, கடற்போக்குவரத்து சேவை , படகுகள் அனுமதி , அரச மற்றும் தனியார் வீதிப்போக்குவரத்து சேவை, அவற்றுக்கான எரிபொருள் ஏற்பாடுகள், சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, புனரமைக்கவேண்டிய வீதிகள், அமுதசுரபி அன்னதான … Read more