சப்புகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் எரிபொருள் பவுசரை மறைத்து வைத்திருந்த நபர் கைது

சபுகஸ்கந்த தனியார் நிறுவன வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் 3500 லீற்றர் டீசல் அடங்கிய எரிபொருள் பௌசரை மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில்  50 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன முகாமில் STF குழுவினரால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக STF தெரிவித்துள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட டீசலின் மதிப்பு ரூ. 1.4 மில்லியன்.    

வாகன உதிரிப்பாகங்களின் விலையில் மிகப் பெரிய அதிகரிப்பு

வாகனங்களின் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை 100 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  வாகனத்திற்கான மின்கலங்களின் விலைகளிலும் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.   டயர்களின் விலை அதிகரிப்பு ரூ.50,000 ஆக இருந்த பேருந்து டயரின் விலை தற்போது ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லொறி டயர் ரூ.21,000 ஆக இருந்தது, தற்போது ரூ.34,000 முதல் ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.9,500க்கு விற்கப்பட்ட  டயர்கள் தற்போது ரூ.16,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கார் … Read more

யாழ்ப்பாணத்திற்கான ஒரு ரயில் பயணத்திற்கு ரூபாய் 3 இலட்சம் நஷ்டம்

ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த … Read more

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் கடற்படையினரால் கைது

மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில விடுதியில் தங்கியிருந்த 13 ஆண்கள், 09 வயது சிறுவன் மற்றும் இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரும் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி இழுவை படகை அவதானித்த கடற்படையினர், … Read more

இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு – வீசா இன்றி பல நாடுகள் செல்ல சந்தர்ப்பம்

வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று Ratata Hetak ஹெடக் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக Ratata Hetak நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சரத் களுகமகே தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம் கடவுச்சீட்டு மீதான சர்வதேச தரவரிசைகளின்படி, இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் குறைந்த … Read more

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் கைது

முகத்துவார பதியில் 01 கிலோ 192 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோனஹேன முகாமில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர். சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த 24 வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸ் விசேட … Read more

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது குறித்து ஆராய்வு – கடற்றொழில் அமைச்சர்

கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்ளுதல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (07) கடற்றொழில் அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது பங்கதெனியவில் நக்டா நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை, கொடுவா உட்பட்ட கடலுணவுகளுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் ஆலோசனைநடத்திபல்வேறு … Read more

ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.   சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மே 9 வன்முறை சம்பவங்கள் கடந்த மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் பல பிரதேசங்களில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக ஜோன்ஸ்டனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  Source link

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குருளைச்சாரண மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நேற்று (07) திகதி செவ்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான செயற்பாட்டின் ஒரு அங்கமான சாரணிய இயக்கத்தில் புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் செயற்பாட்டிற்கமைய மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர் ஆர்.பாஸ்கdpன் வழிகாட்டலின் கீழ் குழுச் சாரண தலைவர் எம்.சந்திரசுசர்மன் தலைமையில் குருளைச் சாரண தலைவர்களான என்.பிரதீபன்,திருமதி.ஜே.விநாயகமூர்த்தி, திருமதி.சீ.பஞ்சேந்திரன் ஆகியோரால் 36 மாணவர்களுக்கு பெற்றோரின் பங்களிப்புடன் சின்னஞ் சூட்டும் … Read more

மாகாண பாடசாலைகளில் 8000 ஆசிரிய வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் உள்ள மாகாணப் பாடசாலைகளில் 8000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும் 22,000 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முதல் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை ,வெற்றிடங்களுக்கு நியமிக்க … Read more