இலங்கைக்கு இன்று எரிவாயுவுடன் வந்துள்ள கப்பல்

எரிவாயு ஏற்றிக் கொண்டு கப்பலொன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று வருகை தந்திருக்கும் கப்பலில் 3900 மெட்ரிக் தொன் எரிவாயு நிரப்பப்பட்டுள்ளது. தற்போதைக்கு எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வழமைக்கு திரும்பவுள்ள எரிவாயு விநியோகம் இன்றையதினம் லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளைய தினம் எரிவாயு விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இன்றைய கப்பலில் எடுத்து வரப்பட்டிருக்கும் எரிவாயு கொழும்பு மற்றும் கம்பஹா … Read more

கட்டார் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

கட்டார் அரசிற்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி. அல்-சோரூர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 06ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் பின்னடைவை அதிகரிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், தூதுவர் அல்-சொரூரிடம் விளக்கினார். இலங்கை – கட்டார் இருதரப்பு உறவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வலியுறுத்திய … Read more

இலங்கையில் நடக்கும் கொலைகள்: புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவல் – செய்திகளின் தொகுப்பு

சமகாலத்தில் இலங்கையில் நாளாந்தம் நடக்கும் படுகொலைகளின் பின்னணி குறித்து புலனாய்வு பிரிவினர் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 நாட்களில் 7 பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாதாள உலகத் தலைவர்களின் உத்தரவுக்கு அமையக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த கொலைகள் அரங்கேற்றப்படுகின்றன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தலுக்குச் சாட்சியாக இருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி … Read more

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு! வெளிவந்துள்ள அறிவிப்பு (Video)

பிரதமரும், நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று சபையில் 69500 கோடி ரூபா குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதில் 2022 ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினை தொடர்ந்தும் வழங்குவதற்கு 87000 மில்லியன் ரூபாவும், 2022 ஜனவரி மாதம் முதல் ஓய்வூதியதாரர்களுக்காக மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5000 ரூபாவினைத் தொடர்ந்தும் வழங்குவதற்காக 40000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி … Read more

கொழும்பு துறைமுகம் உலகில் 22வது இடத்தில்

கொழும்பு துறைமுகமானது உலகில் உள்ள 370 துறைமுகங்களில் 22வது இடத்தையும், இந்து சமுத்திர பகுதியில் 3வது இடத்தையும், இந்திய துணைக்கண்டம் மற்றும் தெற்காசியாவில் மிகவும் செயல் திறன் மிக்க துறைமுகமாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. S&P  குளோபல் மார்க்கெட்டிங் இன்டெலிஜென்ஸ் சமத்திர, வர்த்தக மற்றும் விநியோகப் பிரிவு மற்றும் உலக வங்கியின் உலகளாவிய போக்குவரத்து நடவடிக்கை ஆகியவற்றுடன் இணைந்து வெளியிடப்படும் CPPI  அல்லது கொள்கலன் துறைமுக செயல்திறன் குறியீட்டில் 2021 இந்தத் தரவுகள் பதியப்பட்டுள்ளன. இலங்கையின் துறைமுக அபிவிருத்திக்கான அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் … Read more

ஜனாதிபதி கோட்டாபயவை மீறி நடவடிக்கை எடுக்கும் பிரதமர் ரணில்

ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் அனுமதியின்றி இந்த பதவி நீக்கம் இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் – மத்திய ஆளுநருக்கு இடையில் மோதல் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரின் இராஜினாமாவைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் பதவிக் காலத்திற்கு … Read more

துறைமுக நகர திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க விசேட வரிச்சலுகை

துறைமுக நகர திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 40 வருட காலத்திற்கு விசேட வரிச்சலுகைகளை வழங்குவதற்காக, முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை  பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்தார். “அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் அமைக்கப்பட்ட நாட்டின் முக்கிய திட்டமான துறைமுக நகர் திட்டம் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகள்! ஜனாதிபதி பணிப்புரை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாட்டுப்புற உணவுகளை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். பாதுகாப்பான வனப் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் பலாக்காய் போன்றவற்றை பறிப்பதற்காக, குறித்த வனங்களுக்குள் நுழைவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பலாக்காய் உணவு அதன் ​போது கருத்து வௌியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வாரத்தில் இரண்டு … Read more

விமான நிலையங்களுக்கு செல்வதற்கு டீசல் இல்லை!முக்கியஸ்தர் வெளிப்படுத்திய தகவல்

அரசியல்வாதிகள் தயாரில்லை! நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக குறைநிரப்பு யோசனையை பிரதமர் சமர்ப்பித்துள்ளபோதும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இந்த கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பினார். ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளால், பொதுமக்கள் கஸ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல்வாதிகள் தயாராக இல்லை என்றும் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார். 9 மாகாணங்களுக்கும் அதிகாரம் 9 மாகாணங்களையும் அபிவிருத்தி … Read more