கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்குவது குறித்து ஆராய்வு – கடற்றொழில் அமைச்சர்
கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மற்றும் ஆழ்கடல் பலநாள் கலன்களுக்கான எரிபொருள் விநியோகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்ளுதல் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (07) கடற்றொழில் அமைச்சில் இது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது பங்கதெனியவில் நக்டா நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை, கொடுவா உட்பட்ட கடலுணவுகளுக்கான குஞ்சு இனப்பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் ஆலோசனைநடத்திபல்வேறு … Read more