ரபேல் நடால் 14 ஆவது முறையாக பிரெஞ்சு பகிரங்க பட்டத்தை வென்றார்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ், ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டியில்,ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், நார்வே வீரர் கேஸ்பர் ரூட் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய நடால், 6-3, 6-3, 6-0 என்ற செட் கணக்கில் கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் 14 ஆவது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன், இது அவருக்கு 22 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். பிரெஞ்சு ஓபன் … Read more

விவசாயிகள் பெற்ற , சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி

இலங்கையில்  விவசாயிகள் பெற்ற சிறு, சிறு விவசாயக் கடன்கள் நூறு வீதம் தள்ளுபடி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “சிறிய நிலங்களில் நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்கள் மிகவும்  நிலையில் இருப்பதை நாம் அறிவோம். இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள் 100 வீதம் தள்ளுபடி செய்யப்படும் என” பிரதமர் கூறினார்.      

நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார்! சிங்கள அரசியல்வாதிகள் தயாரா..!

சிங்கள  தலைவர்கள் தயாரா? நாட்டின் கடன்களை தீர்க்க 53 பில்லியன் டொலர்களை புலம்பெயர் தமிழர்கள் வழங்க முன்வந்தால், வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வுக்கு இலங்கையின் சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஸ்ரீதரன் இந்தக் கேள்வியை இன்று நாடாளுமன்றில் எழுப்பியுள்ளார் வடக்கிலும் கிழக்கிலும் பொருளாதாரத்திற்காக இடைக்கால சபையை நிறுவுவதற்கு சிங்கள தலைவர்கள் எவரும் தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

இலங்கைக்கு பெருந்தொகை டொலர்களை வழங்க தயாராகும் உலக நாடுகள்

இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுக்கவுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி உலக நாடுகளுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுக்க தயாராகி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். 6 பில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த 6 மாதங்களுக்கு நாட்டை நிலைநிறுத்துவதற்கு சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் … Read more

முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் கடன்: தீர்மானத்தை அறிவித்த பிரதமர் (Live)

கடன் தொகை தள்ளுபடி தொடர்பிலான அறிவிப்பொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து வழங்கியுள்ளார். கடன் தள்ளுபடி அதன்படி இரண்டு ஹெக்டேயருக்கு குறைவான நிலப்பரப்பை கொண்ட நெற்செய்கையாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறைநிரப்பு பிரேரணை அத்தியாவசிய அரச சேவைகளைத் தடைகளின்றி தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதமர் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் இன்றைய தினம் … Read more

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானமா..! அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் பரப்பப்படும் செய்தி யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எமது பிராந்திய செய்தியாளர் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியுள்ளார். அமைச்சரின் பதில் இதற்கு பதிலளிக்கும் போது அவர், குறித்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என குறிப்பிட்டுள்ளார்.  மேலும் கூறுகையில், … Read more

அமைச்சர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற தீர்மானம்

அமைச்சர்கள் சம்பளம் இன்றி, எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு பணியாற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கசமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார் கொழும்பில் இன்று(7) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு பிரதமர் விக்ரமசிங்கவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 2000 ரூபாவாகும் … Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மிகப் பெரிய அதிகரிப்பு

அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு கிலோ கிராம் அரிசி 500 ரூபாவுக்கும் அதிகமாக  விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பருப்பு ஒரு கிலோக கிராம் 100ரூபாவையும் தாண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ  அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்ட தகவல்களை தெரிவித்துள்ளார்.  மேலும் அதிகரிக்கும் கட்டணங்கள்  சீமேந்து ஒரு மூடை 4000 ரூபாவாக்கு விற்பனை  செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருளின் விலை மீண்டும் … Read more

போராட்டங்களால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது

போராட்டங்களால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆதரவாக செயற்பட வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் ஊடவியலாளர் வினவியபோது, நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு பொலிசார் அதிகளவு காலத்தை செலவிடுவதாகவும், கப்பம் கோருபவர்கள் மற்றும் பாதாள … Read more

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள், எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும்

எதிர்வரும் மூன்று வாரங்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைப் விநியோகிப்பதில் சிரமமான காலகட்டமாக இருக்கும். இதன் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் தங்களைப் பற்றி மாத்திரம் சிந்திக்காது செயல்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் பொது மக்கள் தமது பயணங்களை வரையறுக்துக்கெகாள்ள வேண்டும் என்றும் கூறினார்.