இலங்கையில் இன்று அதிகரித்துள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி! வெளியானது அறிவிப்பு

இலங்கையில் இன்று அமெரிக்க டொலரொன்று பதிவு செய்துள்ள பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இலங்கையில் டொலரின் பெறுமதி மத்திய வங்கியின் இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 366.23 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதியானது 356.09 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  நேற்றைய பெறுமதி ரூபா மற்றும் டொலரின் இன்றைய பெறுமதி  இதேவேளை நேற்றைய தினம் இலங்கையில் டொலரொன்றின் விற்பனை பெறுமதி 365.26 சதமாக பதிவாகியிருந்தது. அத்துடன் டொலரொன்றின் கொள்முதல் … Read more

இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து யூரியா உர பெறுகைக்கு கடன்

பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்கான கடன் தொடரை இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிடமிருந்து பெற்றுக்கொடுக்க இந்திய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இது தொடர்பாக 06.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 06. யூரியா உரம் பெறுகைக் கோரலுக்கான இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கியிலிருந்து 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரைப் பெற்றுக்கொள்ளல் 2022ஃ23 பெரும்போகத்திற்குத் தேவையான யூரியா உரப் பெறுகைக்காக 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடரை இந்திய … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த  அறிவிப்பை விடுத்துள்ளார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை குறைந்தபட்ச விலையில் உணவுப் பொட்டலத்தை வழங்குமாறு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில்  சபைக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன  குறிப்பிட்டுள்ளார்.  Source link

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்த இருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்த இரண்டு சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களில், ஒருவரிடமிருந்து 43 லீற்றர் பெற்றோல், 28 லீற்றர் டீசல் மற்றும் 42 லீற்றர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றுமொரு சந்தேக நபரிடமிருந்து 200 லீற்றர் மண்ணெண்ணெய்யும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறு … Read more

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று (07) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று(07) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை நாமும் நம் நாடும் எதிர்கொள்ளும் நிலைமையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிலையில் இருந்து நாட்டை உயர்த்த பாரம்பரிய வழிகளில் இருந்து புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை குறுகிய காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த முயற்சியில் முழு நாட்டு மக்களும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும். நாட்டிற்காக நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய … Read more

அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேற்றம்! சஜித் கவலை

இலங்கையின் அறிவார்ந்த தலைமுறை நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார். விமான சேவைகள் நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. வாழும் உரிமையை இழந்த இலங்கை மக்கள்  இன்று மக்கள் வாழ்வதற்கான உரிமையைக்கூட மக்கள் இழந்துள்ளனர். பெருமளவான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக நமது நாட்டின் … Read more

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்ய அனுமதி

எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன, சேதன உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெரும்போகத்தில் 800,000 ஹெக்ரெயரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டு அதற்கு தேவையான உரங்களை வரையறுக்கப்பட்ட லங்கா உரக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட கொமர்ஷல் உரக் கம்பனி ஊடாக இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 06.06.2022 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:   04.      2022/23 பெரும்போக நெற் செய்கைக்குத் தேவையான இரசாயன … Read more

இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து அவருக்கு அனுதாபம் தெரிவிக்க ஏற்பாடு

கொழும்பு குவைத் தூதரகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான குவைட் தூதுவராக பணியாற்றிய கௌரவ அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்கள் 01.06.2022ம் திகதி குவைட் நாட்டில் காலமானார். இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம் தெரிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள குவைத் தூதரகம் தெரிவித்துள்ளது. … Read more

இலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்! பிறப்பிக்கப்பட்டது விசேட கட்டளை (Live)

பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசேட கட்டளை இது தொடர்பான விசேட கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார். குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அதிகாரம் மேலும், 40ஆவது அதிகார சபையான பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாகவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link