சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று (02) சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எரிவாயுவை இலகுவாக பெற்றுக்கொள்ள வசதியாக ,அருகிலுள்ள விற்பனை நிலையங்களின் பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது.    

இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவிக்கையில் இன்று 2ஆம் திகதி முதல் எதிர் வரும் 5ஆம் திகதி வரை மீண்டும் மின் துண்டிப்பு இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இதற்கமைய 2 ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியால மின்துண்டிப்பும் 4 ஆம் திகதி ஒரு மணித்தியால மின் துண்டிப்பும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனினும் 5 ஆம் … Read more

இலங்கையில் தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு: கட்டண அதிகரிப்பு குறித்து தகவல்

இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரி அதிகரிப்பு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்ட வரி  அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15%ஆகவும் அதிகரிக்கப்படுமென மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. தொலைபேசி மற்றும் இணையத்தள சேவைக் கட்டணங்கள் இந்த நிலையிலேயே வரி … Read more

தொழில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் சகல பிரதேச அலுவலகங்களும் இந்த மாதம் 3ம் திகதியிலிருந்து பிரதி வெள்ளிக்கிழமைகளில் மூடப்படுமென தொழில் ஆணையாளர் நாயகம் டி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். அரச செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரச நிறுவனங்களின் பணிக்குழாத்தை வரையறுக்கும்; வகையில் வெளியிடப்பட்டிருக்கும் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் சேவை பெறுவதற்காக வெள்ளிக்கிழமைகளில் தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கோ, பிரதேச அலுவலகங்களுக்கோ வருகை தர வேண்டாமென தொழில் ஆணையாளர் நாயகம் டி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு தேவை: சபாநாயகர் தெரிவிப்பு

நாடாளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு தற்பொழுது நாட்டில் இடம்பெற்று வரும் சம்பவங்களை பார்க்கும் போது நாடாளுமன்றிற்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்பதே புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் நாட்டின் சட்டங்களை உரிய முறையில் பின்பற்றுதில்லை என சபாநாயகர் தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார். இதன்படி நாடாளுமன்றில் கூட்டங்களை நடத்தும் போது தற்பொழுது வழங்கப்படும் பாதுகாப்பினை விடவும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு … Read more

வன்முறை பற்றி விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியிலிருந்து மே மாதம் 15ம் திகதி வரையான பகுதியில் இடம்பெற்ற கொள்ளை, கொலை, தீ வைப்பு உள்ளிட்ட சொத்து மற்றும் உயிர் சேதம் பற்றிய விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர் டீ.P அலுவிஹார ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்ஹ மற்றும் மேலதிக பிரதான மதிப்பீட்டாளர் என்.ஏ.எஸ்.வசந்த குமார ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். … Read more

சாதாரண தரப் பரீட்சை: விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நேற்று(01) நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீடுப் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன. முதல் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீடுப் பணியில் ஈடுபடவுள்ள … Read more

இலங்கையில் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்ட பொருட்களின் முழு விபரம் வெளியானது

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் 369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளது. எனினும் இந்த பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரி, சுங்க வரி மற்றும் மேலதிக கட்டணம் ஆகியவற்றை கணிசமாக உயர்த்த நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் மாதம் 09 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இறக்குமதி உரிமங்களைப் பெறுவதை கட்டாயமாக்கும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. … Read more

யூரியா வழங்க உலக வங்கி இணக்கம்

எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா பசளையை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் ஆணிவேர் பிரச்சினையான இரசாயனப் பசளை பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். உலக வங்கி இணக்கம் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் அது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் வேண்டுகோள்கள் ஊடாக விவசாயிகளுக்குத் ​தேவையான பசளையை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார். அதன் … Read more