எரிபொருள் நிரப்பு நிலையம் மீது தாக்குதல் : ஒருவர் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்ள வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் அலுவலகம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணை கைதுசெய்யப்பட்ட நபரை இன்று 01.06.2022 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்புபொலிசார் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் வெளியான கருத்து  இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பலநோக்கு … Read more

பொருளாதார நெருக்கடி: குழந்தைகள் பெற்றோரின் கவனத்தை இழக்கும் அபாயம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகும் ஆபத்தான நிலை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சமீப காலமாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பெற்றோரின் கவனத்தில் இருந்து விலகும் வாய்ப்புகள் அதிகம் காணக்கூடியதாக இருப்பதாக அதிகாரசபையின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் ஏற்படக்கூடிய மன அழுத்தங்களை பெரியவர்கள் சிறுவர்கள் ஊடாக வெளிப்படுத்த முற்படும் நிலையொன்று காணப்படுகின்றது. இதன் காரணமாக … Read more

எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் ,எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு..

3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இதேவேளை, இன்றும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கூட 50,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கே விநியோகிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள், எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வரும்போது, விற்பனை முகவர் நிலையங்களில் சிலிண்டர்கள் இருக்கின்றதா என்பதை உறுதி செய்துகொண்டு வருமாறு லிட்ரோ நிறுவனம் … Read more

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை: ஒன்ராரியோ அரசுதரப்பு(Photo)

தமிழின அழிப்பு அறிவூட்டல் வார சட்டம் எந்த வகையிலும் ஒன்ராரியோ அரசியல் யாப்பை மீறவில்லை என்ற தமது ஆணித்தரமான வாதத்தை ஒன்ராரியோ அரசுதரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்துள்ளனர். இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய நீதிக்கான போராட்டத்தை தாய் மண்ணிலும் புலத்திலும் மூழ்கடிப்பதற்காக மிகவும் கடினமாக உழைத்து வருவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. ‘Tamil Genocide Education Week Act’ சட்டம் இலங்கை அரசாங்கம் அதனது ஆதரவாளர்களுக்கூடாக ஒன்ராரியோ மாகாணத்தில் விஜய் தணிகாசலத்தின் கடும் முயற்சிகளுக்கு மத்தியில் ஒன்ராரியோ … Read more

உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர்: அவருக்கிருந்த நோயால் அதிர்ந்த தாய்மார்கள்

பிரித்தானியாவில் உயிரணு தானத்தால் 15 பிள்ளைகளுக்கு தந்தையான பிரித்தானியர் ஒருவர் தமக்கிருந்த குணப்படுத்த முடியாத மரபணு நோயை மறைத்ததாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குறித்த நபருக்கு மரபணு நோயானது குணப்படுத்த முடியாது என்பதுடன், அவரால் பிறக்கும் குழந்தைகள் கற்றல் திறன் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. டெர்பி பகுதியை சேர்ந்த 37 வயது ஜேம்ஸ் மெக்டோகல் என்பவரே தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கிறார். இவரது சமூக ஊடக விளம்பரத்தை நம்பி தன்பாலின ஈர்ப்பு பெண்கள் … Read more

அட்டுலுகம சிறுமி விவகாரம்! சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பண்டாரகம, அட்டாலுகமவில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதான நீதவான் ஜெயருவன் திஸாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் தனிப்பட்ட வாக்குமூலம்  தனிப்பட்ட வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.   Source link

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை! அபாய கட்டத்தில் சிறுவர்கள்

அண்மைய நாட்களில் 100க்கும் அதிகமான நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு  சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக,  அவர் குறிப்பிட்டுள்ளார். ஊட்டச்சத்து குறைபாடு  கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு நோய்க்கான அறிகுறிகள் காட்டியதாகவும், … Read more

கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன. செட்டியார் தெருவில் தங்க நிலவரம் இன்றைய தினம் கொழும்பு – செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 189,700 ரூபாவாகவும், 2224 … Read more

சர்ச்சைக்குள்ளாகும் பொது மன்னிப்பு விவகாரம்! ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப் போகும் குழு

அரசியலமைப்பினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய விடயங்கள் தற்போது காணப்படுகிறது ஆகவே பொது மன்னிப்பு தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க விசேட ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா  தெரிவித்துள்ளார்.   சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். திருத்த யோசனைகள் முன்வைப்பு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்ட மூலவரைபு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நீதியமைச்சரிடம் பல … Read more