சவாலான நிலையை எதிர்நோக்கும் இலங்கை: அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அரச ஊழியர்கள் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன அறிவித்துள்ளார். அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்  இணையவழி அரச சேவை தற்போதைய … Read more

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை எதிர்கொண்டுள்ள ஆபத்து

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் ஏற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கடன்களை பெறுவதற்கு வேறு நாடு இலங்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உலக வங்கி ஏற்கனவே கூறியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான நிலையில் … Read more

சீனா ,இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் வாழ்வாதார உதவி

சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதமர் லீ கெகியாங் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

GCE O/L :அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதுவதற்கு சந்தர்ப்பம்

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வெள்ளம் உட்பட இயற்கை அனர்த்தங்களினால் உரிய பரீட்சை மண்டபங்களுக்கு செல்ல முடியாவிட்டால் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்று பரீட்சை எழுதுவதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்சமயம் நிலவும் அடைமழையினால் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பரீட்சார்த்திகள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளமையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்ககப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்சமயம் நிலவும் காலநிலையினால் சாதாரண தரப் … Read more

எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் இராணுவத்தின் எரிபொருள் விரயம்

இலங்கை ராணுவத்தின் முதற்தர அதிகாரிகள் இராணுவ நிதியில் இருந்து வருடமொன்றுக்கு 2,703,520 லீற்றர் எரிபொருளை வீண்விரயம் செய்வதாக தெரிய வந்துள்ளது. இலங்கைஇராணுவத்தில் முதற்தர அதிகாரிகள் அதாவது லெப்டிணன்ட் கேணல் தரம் தொடக்கம் இராணுவத் தளபதி வரையான பதவிநிலைகளில் தற்போதைக்கு ஆயிரத்து 108 பேர் கடமையாற்றுகின்றனர். கடந்த யுத்த காலம் தொட்டு இராணுவத்தின் முதற்தர பதவி நிலையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட பயன்பாட்டுக்கு என ஒரு வாகனம் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மாதாந்த வாடகை சுமார் ஒரு லட்சமாகும். பெரும்பாலான … Read more

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா உதவி

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார். அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான  உதவிகளை எடுத்துரைத்தார். கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு … Read more

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சீரற்ற வானிலை காரணமாக, நாளைய தினம் தங்களது பரீட்சை மையங்களுக்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாளைய தினம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. Source link

கட்சியின் தீர்மானத்தை மீறிய சிரேஷ்ட உறுப்பினர்கள் – மைத்திரி தலைமையிலான கூட்டத்தில் அதிரடி முடிவு

கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீரவிற்கு அழைப்பில்லை இதன்போது தற்போதைய அரசியல் … Read more

மே 9 வன்முறை:பொரலஸ்கமுவ நகர சபைத் தலைவரிடம் வாக்குமூலம்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி அலரி மாளிகைக்கு எதிரே மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் பொரலஸ்கமுவ நகர சபையின் தலைவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்படி வன்முறையுடன் தொடர்புடைய 16 சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.