அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க சட்டங்களில் திருத்தம்

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் நிதிச் சட்டங்கள் பலவற்றில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். இதற்கமைவாக 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம், 2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டம், தொலைத்தொடர்பு வரிச்சட்டம், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க, பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம் முதலான சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுகுறித்து திருத்தம் செய்வதற்குத் தேவையான சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி பொருளாதார … Read more

சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு! நேற்று முதல் புதிய நடைமுறை

சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு செல்லும் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவில் விமான சேவை அதிகாரசபைக்கு தொழிலாற்றும் பொறிமுறையொன்று நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முற்பகல் 8.30 முதல் பிற்பகல் 4.15 வரையில் அலுவலகத்திற்கு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பணியாளர்கள் வீடுகளில் … Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை

நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்ப வன்முறை கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்ணன், தங்கை பலி அண்ணனும் 32 வயதுடைய ஒருவரும் அவரது … Read more

லிற்றோ காஸ் சிலிண்டர்கள் இன்று முதல் மீண்டும் சந்தைக்கு

இன்று (31)முதல், மீண்டும் காஸ் விநியோகம் ஆரம்பமாகுமென லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 50 ஆயிரம் சமையல் எரிவாவு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. 3,500 மெட்ரிக் தொன் காஸ்சுடன் கூடிய கப்பல் நேற்று காலை நாட்டை வந்தடைந்தது. இந்த காஸ்ஸை தரையிறக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் முதல் இந்த காஸ்ஸை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஸ்ஸை பெற்றுக் கொள்ளும் விற்பனை முகவர்கள் தொடர்பான தகவல்களை லிற்றோ நிறுவனத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

சவேந்திர சில்வாவின் பதவி பறிப்புக்கு சட்டச் சிக்கல் காரணமா?

ஜெனரல் சவேந்திர சில்வாவின் இராணுவத் தளபதி பதவி பறிக்கப்பட்டதற்கு சட்டச் சிக்கல் ஒன்று காரணமாக அமைந்திருந்ததாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இன்றைய தினம் வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போதும் அவருக்கான சேவை நீடிப்பு சட்டரீதியாக வழங்கப்படவில்லை. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஏதும் இதுவரை வெளியிடப்படவும் இல்லை. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சிடம் ஊடகவியலாளர் லசந்த … Read more

அட்டலுகம சிறுமியின் கொலை: கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்து விசாரணை

அட்டுலுகம பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பாணந்துறை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. தான் குற்றம் செய்திருப்பதாக அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் நிஹால் தல்துவ தெரிவித்தார். சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகவில்லை என பாணந்துறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்காக வங்கித்தொழில் முறைமையினூடாக வெளிநாட்டுச் செலாவணி – மத்திய வங்கி மீளுறுதிப்படுத்தல்

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்யும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறந்த கணக்குக் கொடுப்பனவு நியதிகள் அல்லது சரக்குக் கணக்கு நியதிகளைப் பயன்படுத்துவதனைக் கட்டுப்படுத்தி, 2022 மே 06ஆம் திகதியிடப்பட்ட 2022ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கொடுப்பனவு நியதிகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை 2022 மே 20 தொடக்கம் நடைமுறைக்குவரும் விதத்தில் நிதியமைச்சு வெளியிட்டது. உள்நாட்டு வங்கித்தொழில் முறைமையில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளை மேம்படுத்தும் பொருட்டு இலங்கை மத்திய வங்கியினாலும் அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஏனைய பல்வேறு … Read more

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்து விசேட குழுவை நியமிக்கும் பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக உயர்மட்ட நிபுணர் குழுவொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கவுள்ளார். திறைசேரியின் முன்னாள் செயலாளர் கலாநிதி ஆர். எச். தி. சமரதுங்க தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரியவருகிறது. இதில் உறுப்பினர்களாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, கலாநிதி ஷாமினி குரே உள்ளிட்டவர்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவில் … Read more

உக்ரைனுக்கு ஏவுகணை வழங்க மாட்டோம்: ரஷ்ய எச்சரிக்கைக்கு அடிபணிந்த அமெரிக்கா!

ரஷ்ய எல்லைகளை தாக்கும் வல்லமை கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்காது என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய போர் நடவடிக்கையானது தற்போது உக்ரைனின் கிழக்கு பகுதியில் தீவிரமடைந்து வரும் நிலையில், டான்பாஸின் பெரும்பாலான நகரங்களை உக்ரைன் இழக்க தொடங்கி வருகிறது. அத்துடன் 1,00,000 மக்கள்தொகையை கொண்ட நகரத்தின் பெரும்பாலான பகுதிகளை ரஷ்ய படைகள் தங்களது பீரங்கி மற்றும் ஏவுகணை குண்டுகளால் தாக்கி வருவதற்கு மத்தியில், உக்ரைனின் முழு முக்கிய … Read more

குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் 21வது திருத்தத்திற்கு ஆதரவு – சஜித் அணி அறிவிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் 21வது திருத்தச் சட்டமாக முன்வைக்கப்பட்ட வரைவில் சில விடயங்களில் உடன்பாடு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி 21வது திருத்தத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடனான … Read more