சிறுமி துஸ்பிரயோகத்திற்குள்ளான விவகாரம்! பூசகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சிறுமியைக் காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோயில் பூசகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்குப் பிணை வழங்கியும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை – பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை – சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான … Read more

முட்டையின் விலை 50! கோழியின் விலையும் உயர்கிறது

எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1200 ரூபாவாகவும் அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் அஜித் குணசேகர இதனை குறிப்பிட்டார்.  டொலர்கள் இல்லை தனது தொழில்துறைக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, உரம் கிடைக்காமல் தவிக்கும் … Read more

பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் – உலக உணவு – விவசாய அமைப்பு

இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில் ஈடுபடும் ஒரு குடும்பத்திற்கு 18 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு அமைப்பு விருப்பம் தெரிவித்துள்ளது. அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதியான விம்லெம்ரா செரன் அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறுபோகத்தில் வேளாண்மைச்; செய்கை மேற்கொள்ளாத காணிகளில் பயறுச் செய்கையை மேற்கொள்ள முடியும் என்று அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார். … Read more

வடகிழக்கு பிரேசிலில் கனமழை:உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு

வடகிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக ஆக அதிகரித்துள்ளது. கனமழையினால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளம் குடியிப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் காரணமாக அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பிரேசிலில் பெய்து வரும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் … Read more

நாட்டு மக்களுக்கு பிரதமர் ரணில் விசேட உரை (Video)

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் , அரசியல் மறுசீரமைப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டு மக்களுக்கு மக்களுக்கு விசேட உரையாற்றியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படுமெனவும் அதற்கான காலம் மற்றும் வழிமுறைகளை கட்சித் தலைவர்கள் முடிவுசெய்யலாம் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.  நிதி மற்றும் மேற்பார்வைகளுக்காக 15 தெரிவுக்குழுக்களை நியமிக்கவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். Source link

கடற்பரப்புகளில் வானிலை கடல் நிலை

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 29ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு … Read more

திருமணம் முடிந்த சில வாரங்களில் நிக்கி கல்ராணி எடுத்த புதிய முடிவு?

நடிகை நிக்கி கல்ராணி தமிழில் பல ஹிட் படங்களில் நடித்து இருப்பவர். அவர் சமீபத்தில் நடிகர் ஆதியை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் மரகதநாணயம் என்ற படத்தில் சேர்ந்து நடித்தனர். அவர்கள் ஆரம்பத்தில் நட்பாக பழகி அதன் பின் காதலிக்க தொடங்கி தற்போது திருமணம் செய்திருக்கிறார்கள். திருமண வரவேற்ப்பில் சினிமா துறையினர் பலரும் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நிக்கி தொடர்ந்து நடிப்பாரா என்று தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள். இந்நிலையில் தற்போது நிக்கி கல்ராணி கலர்ஸ் … Read more

மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும்… ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநரிடம் தெரிவிப்பு

மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நாணயச் சபை உறுப்பினர் திரு. சஞ்சீவ ஜயவர்தன ஆகியோருடன் நேற்று (28) கோட்டை,  ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். நியமனம் பெற்று குறுகிய காலத்திற்குள் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், அவற்றைத் தணிக்கவும் திரு. நந்தலால் வீரசிங்க அவர்கள் மேற்கொண்ட … Read more

அட்டலுகம சிறுமியின் மரணம்: குற்றப் புலனாய்வு விசாரணை ஆரம்பம்

பண்டாரகம – அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 09 வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். இதேவேளை, சிறுமியின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது.இதன் மூலம் சம்பவம் தொடர்பில் பல விடயங்கள் தெரியவந்திருப்பதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிசார் பிரதேசவாசிகள் பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தந்தையிடம் நேற்று 5 மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சிறுமி நேற்று முன்தினம் காலை அவரது வீட்டிலிருந்து … Read more

அரசியல்வாதிகள் மீது தாக்குதல் நடத்துமாறு முகநூலில் பதிவிட்ட பிரபலம்! முன்னாள் அமைச்சர் கூறும் தகவல்கள்

பிரபல நடிகை ஒருவர் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்குமாறு பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்திருந்தார் என முன்னாள் அமைச்சரும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஆதரவாளர்களை தூண்டிவிட்ட அரசியல் தலைவர்கள் அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானித்திருந்த நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மக்கள் அலரிமாளிகைக்கு வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தூண்டிவிட … Read more