நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது – பிரதமர் தெரிவிப்பு

நாட்டில் போதியளவு உர விநியோகத்தை உறுதிப்படுத்த 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவசாயத் துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், வங்கிகள் டொலரை விடுவித்தால் உர நிறுவனங்களுக்கு தேவையான உர அளவுகளை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயப் பொருட்களை தடையின்றி வழங்குவதையும் விநியோகிப்பதையும் உறுதிசெய்யும் புதிய சட்டமான அத்தியாவசிய விவசாயப் பொருட்கள் சட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப் போவதாகவும் பிரதமர் விளக்கினார். உக்ரைன் யுத்தம் காரணமாக … Read more

அரசாங்கத்தின் அனைத்து ஊடக தலைவர்களையும் பதவி விலகுமாறு அறிவிப்பு

அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

எரிவாயு விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம்

உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் அடுத்த வாரத்தின் மத்தியில் தொடங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காஸ் சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 3,500 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு கப்பல் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வரும் என எதிர்பார்ப்தாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த கப்பல்களில்  கொண்டு வரப்படும் எரிவாயுவின் அளவு 7500 மெட்ரிக் டொன்களாகும். … Read more

வாகனப் பதிவுகளில் பாரிய வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டில் ,கடந்த நான்கு மாதங்களில் புதிய வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவுகள் பாரிய அளவில் குறைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான நான்கு மாதங்களில் 576 கார்கள் மற்றும் 2,205 மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காலப்பகுதியில் 199 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொவிட் 19 தொற்றுநோய் பரவலாக காணப்பட்ட ஆண்டான … Read more

அரச வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள அரசாங்கம் – வெளியாகியுள்ள தகவல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் புதிய வரவு செலவுத் திட்ட யோசனையின் ஊடாக நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி திரு.லால்காந்த இதனை தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த வளங்களை விற்பனை செய்வதன் மூலம் நாட்டுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை … Read more

21வது திருத்தம் குறித்து சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு….  

ஜக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று சட்டமா அதிபர் நேற்று (26) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 21 மற்றும் 22 ஆவது திருத்தங்களின் தனிப்பட்ட தீர்மானங்களில் உள்ள சில விதிகள், அரசியலமைப்புக்கு முரணானவை எனவும் … Read more

பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல பிரஜையை உருவாக்குவதே கல்வி சீர்திருத்த செயல்முறையின் விளைவாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கல்வி அதிகாரிகளிடம் தெரிவிப்பு

கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். கல்வித்துறையில் முன்னுரிமை வழங்கப்படவேண்டியவைகள் மற்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்று (27) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். நீண்ட காலமாக நாடு எதிர்நோக்கும் முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய கல்விக் கொள்கை … Read more

அடுத்த பிரதமர் மைத்திரி தான்! ரணில் ஜனாதிபதியாக பதவியேற்பார்: காரணத்தை கூறும் முக்கியஸ்தர்

எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல. அதில் ஒரு கூட்டணி கட்சி மட்டுமே. சஜித் பிரேமதாச எனது தலைவர் அல்ல. கூட்டணியின் தலைவர் அவ்வளவுதான். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அரசியல் தலைவர்கள் மற்றும் தற்போதைய இலங்கை அரசியல் களம் தொடர்பில் விரிவாக கருத்துரைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் பிரபலமான தலைவர்களுக்கு அருகில் … Read more

இலங்கை மக்களுக்கான மனிதாபிமான உதவிகள்

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒருதொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப்பொருட்களை பதில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் அவர்கள், சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல அவர்களிடம் 2022 மே 27 ஆம் திகதி கொழும்பில் கையளித்தார்.  25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய இத்தொகுதியானது கிட்டத்தட்ட 260 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடையதென மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.ஜானக சந்த்ரகுப்தா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.  2.    இம்மனிதாபிமான உதவிப்பொருட்களை … Read more

எரிபொருள் வரிசையில் பெண்ணிடம் கைவரிசையை காட்டிய நபர்கள்! இலட்சக்கணக்கில் இழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ளது.   தம்புள்ளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் நின்ற பெண் ஒருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துச் சென்றுள்ளனர். தங்க நகையின் பெறுமதி இலட்சக்கணக்கில்  குறித்த சம்பவம் இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தம்புள்ளைப் பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளையைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவர் இதுகுறித்து  பொலிஸில் முறைப்பாடு … Read more