வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் தகவல்களை உடனடியாக பரிமாற்றிக் கொள்ளக்கூடிய செயலி
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாகனங்களைக் கண்காணித்து,அதுதொடர்பான தரவுகள் மற்றும் தகவல்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் உடனடியாக பரிமாறிக் கொள்ளக்கூடிய செயலி (App) தற்போது நாட்டில் பல இடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தகவல் தொழிநுட்பப் பிரிவினால் இந்த செயலி (App) உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள வரும் வாடிக்கையாளர்களின் வாகனத்தின் இலக்கத்தகடு குறித்த விபரமும் … Read more