என்னை மன்னித்து விடுங்கள்..! பிரதம நீதியரசரிடம் கோரியுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். பிரதம நீதியரசருக்கு நேரடியாக அனுப்பிய கடிதம் தொடர்பிலேயே ஜெகத் அல்விஸ் தமது மன்னிப்பைக் கோரியுள்ளார். இந்த கடிதம் தொடர்பில், ஜெகத் அல்விஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரதம நீதியரசர், சட்டமா அதிபருக்கு அறிவித்தமையை அடுத்தே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. தனது அதிகாரத்தை மீறி, மேஜர் ஜெனரல் அல்விஸ், பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியமைக்காக சட்டமா … Read more

நாளை (23) க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி : பரீட்சையினை வெற்றிகரமாக நடாத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவும்

க.பொ.த. சாதாரண தர பரீட்சையினை நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது பூர்த்தியடைந்துள்ளதாகவும், பரீட்சையினை எவ்வித தடையுமின்றி நடாத்துவதற்கு அனைவரும் தமது பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் அனைத்து பொதுமக்களிடத்திலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2021 க.பொ.த. (சா/த) பரீட்சையின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டே அமைச்சர் இவ்வாறு … Read more

இரண்டு வாரங்களுக்கு தேவையான எரிவாயு

எரிவாயுவைக் கொண்ட இரண்டு கப்பல்களுக்கு நாளைய தினம் பணம் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து ,நாட்டில் இரண்டு வாரங்களுக்குப் போதுமான எரிவாயு இருக்குமென்று லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு கப்பல்களுக்கும் நாளை 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளன. நிறுவனத்திடம் தற்போது 6 தினங்களுக்குப் போதுமான எரிவாயுவே உண்டு. இன்று முதல் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இவற்றில் 30 ஆயிரம் கொழும்பு – கம்பஹாவிற்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளன.

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது. தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King … Read more

கெஸ்பாவ எரிபொருள் நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம்

கெஸ்பாவ எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொல்கஸ்-ஓவிட்ட எரிபொருள் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் பௌசர் சில தினங்களுக்கு முன்னர் கெஸ்பாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்டதினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் வீதித் தடைகளை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் செயற்பட்டால் குறிப்பிட்ட எரிபொருள் நிலையத்திற்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்படுமென்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடிக்கு சபாநாயகர், பிரதமருக்கு ஆலோசனை

நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதற்கமைவாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை வைப்பீடு செய்வோருக்கு 6 மாதங்களின் பின்னர் 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு சுங்கவரியற்ற அனுமதிச் சான்றிதழை வழங்குவதற்கு சபாநாயகர் பரிந்துரைத்துள்ளார். இதேபோன்று வாகனங்களுக்கான வரியாhக அரசாங்கத்திற்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் பணியாற்றும் அல்லது வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் … Read more

இலங்கையில் ஜூன் மாதத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுவது உறுதி! நாடாளுமன்ற உறுப்பினர் தகவல்

ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற்றுக் கொள்வது மக்கள் மத்தியில் … Read more

அவுஸ்திரேலியப் பிரதமருக்கு, இலங்கை ஜனாதிபதி வாழ்த்து

அவுஸ்திரேலிய நாட்டின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள Anthony Albanese  க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை மிக விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவுகளை முன்னெடுப்பதற்கு அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதில் மேலும் தெரிவித்துள்ளார். 

பெருந்தொகையான டொலர்களோடு வசமாக சிக்கினார்

 50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ராஜகிரிய வெலிக்கடை பகுதியில்,மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  சட்டவிரோத உண்டியல் மற்றும் ஹவாலா பணப்பரிமாற்ற முறைகளில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம், இலங்கை மத்திய வங்கி, இலங்கையர் ஒருவர் வைத்திருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயத்தின் சட்ட வரம்பு குறித்த ஏற்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தது. … Read more

உலக நாடுகளில் கொரோனா: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவின் வுஹான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52.72 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52 கோடியே 72 இலட்சத்து 33 ஆயிரத்து 817 ஆக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.