டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி உயர்வு

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளது.   இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 354.48 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதேசமயம் டொலரொன்றின் விற்பனை பெறுமதி  364.45 ரூபாவாக பதிவாகியுள்ளது. Source link

நிலையியற் கட்டளைத் திருத்தம்: சகல பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரங்களைப் பலப்படுத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்படும் 

நிலையியற் கட்டளைகளைத் திருத்தம் செய்வதன் மூலம் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) உள்ளிட்ட சகல பாராளுமன்றக் குழுக்களின் அதிகாரங்களையும் பலப்படுத்துவதற்கான பிரேரணை இன்று அல்லது அடுத்தவாரம் முன்வைக்கப்படும் என சபை முதல்வரும், அமைச்சருமான கௌரவ தினேஷ் குணவர்தன இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் சபை முதல்வர் அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தன சபையில் தெரிவித்ததாவது, “அரசாங்கம் என்ற ரீதியில் இன்றையதினம் அல்லது … Read more

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

சர்வகட்சி அரசாங்கத்தின் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று, (20) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. திரு.நிமல் சிறிபால டி சில்வா            –  துறைமுகங்கள், கப்பற்துறை                                                … Read more

தொடர்ந்து உயரும் பாணின் விலை

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கோதுமை மாவை இறக்குமதி செய்யும் உள்ளூர் நிறுவனமான செரண்டிப், கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 35 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதுடன், பிரிமா நிறுவனமும் கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி … Read more

இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவிற்கு பௌத்த , இந்து மதகுருமார்கள் முதன்முறையாக விஜயம்

சவூதி அரேபியாவின் மக்காவை தளமாகக் கொண்ட ஒரு சர்வதேச இஸ்லாமிய அரச சாரா, மதத் தலைவர்கள் மற்றும் மூத்த அறிஞர்களுக்கான அமைப்பான முஸ்லீம் வேர்ல்ட் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே பொதுவான மதிப்புக்களை ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மன்றத்தில் பங்கேற்பதற்காக, முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளரும், முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவருமான ஷேக் கலாநிதி. முஹமத் பின் அப்துல்கரீம் அல்-இஸ்ஸாவின் அழைப்பின் பேரில், இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவரும், ஜப்பானுக்கான பிரதம சங்க … Read more

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மாலைதீவில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் இரத்த தானம்

இலங்கை சமூகத்தின் பங்கேற்புடன், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை வங்கியின் அனுசரணையுடன் இலங்கைத் தூதரகத்தால் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், முதலாவது இரத்த தானம் வழங்கும் முன்முயற்சியாகும். மாலைதீவின் தலைநகர் மாலேயில் உள்ள மாலைதீவு இரத்த சேவையில் (தலசீமியா மையம்) மாலைதீவு சுகாதார இராஜாங்க அமைச்சர் கலாநிதி. ஷா அப்துல்லா மஹிர் அவர்களின் தலைமையில், தூதரக ஊழியர்கள், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் நாட்டு முகாமையாளர் ஃபவ்ஸான் ஃபரீட், இலங்கை வங்கியின் நாட்டு முகாமையாளர் கோவிந்த ஆரம்பத் மற்றும் இலங்கை … Read more

காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய … Read more

சற்று முன் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு! ஹரினிற்கும் அமைச்சர் பதவி

தற்போது அமைச்சரவை அமைச்சர்கள் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து வருகின்றனர். அதன்படி 9 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.  நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல – சுகாதார அமைச்சர் விஜயதாச ராஜபக்ச – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ – காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் … Read more