ரணிலின் வருகையால் ஏற்படவுள்ள மாற்றம் – அமெரிக்கா வெளியிட்ட தகவல்

இலங்கையின் அண்மைய அரசியல் மாற்றங்களுடன் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் குறைவடைந்து பத்திரங்களின் பெறுமதி உயரும் என அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே.பி.மோர்கன் தெரிவித்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை தற்போதைய குறைந்த மதிப்பை விட பத்திரங்களின் மதிப்பு உயர வழிவகுக்கும் என வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று வங்கி கணித்துள்ளது. இந்த ஸ்திரத்தன்மை சர்வதேச நாணய நிதியத்தின் விவாதங்கள் … Read more

பௌத்த வழி ஊக்குவிப்பின் கீழ் இந்திய பௌத்தர்கள் இலங்கைக்கு…

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 90 பௌத்தர்கள் அடங்கிய பௌத்த சுற்றுலாக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. தூதரகத்தால் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழி ஊக்குவிப்பு முயற்சிகளின் கீழ் இந்தியாவிலிருந்து பௌத்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது குழு இதுவாகும். 2022 மே 12ஆந் திகதி கொழும்பை வந்தடைந்த குழுவினர், அனுராதபுரம், கண்டி, கதிர்காமம் போன்றவற்றில் உள்ள புனித பௌத்த தலங்களுக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

பாரிஸ் குத்துச்சண்டை போட்டியில் இலங்கை ராணுவ வீரர் தங்கம் வென்றார்

பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற  ‘லெஸ் செண்சுரீஸ் குத்துச்சண்டை சுற்றுப்போட்டி பாரிஸ்-2022’ இல் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர் லான்ஸ் கோப்ரல் பி.ஏ.ஆர் பிரசன்ன, வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார். இராணுவ ஊடக வட்டாரங்களின்படி, 24 விஜயபாகு காலாட்படை படைப்பிரிவை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் பிரசன்ன இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை தேசிய அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றிபெற்ற ஒரே வீரர் ஆவார். மேட்படி  போட்டிகள் இம்மாதம் … Read more

இலங்கையில் கடன் அட்டை நிலுவைத் தொகை 138 பில்லியனாக அதிகரிப்பு

அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கையர்கள் தமது கடன் அட்டைகள் மூலம் 5.5 பில்லியன் ரூபா பரிவர்த்தனை செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. குறித்த மூன்று மாதங்களில் மாத்திரம், மொத்த கடன் அட்டை இருப்பு 3.9 பில்லியன் ரூபாவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், 2022 மார்ச் மாத இறுதிக்குள் மொத்த கடன் அட்டை இருப்பு 138.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் ஒரு … Read more

தேசத்தின் 13 வது போர் வீரர்களின் நினைவு தின நிகழ்வு

தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூறும் வகையில் நேற்று (19) முற்பகல் ஸ்ரீ ஜயவர்தனபுர போர்வீரர் நினைவுத்தூபியில் (ரணவிரு ஸ்மாரகய) ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் போது போர் வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதன் போது பிரதம அதிதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டதுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத்அல்விஸ், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா … Read more

நாணயக்கொள்கை மீளாய்வு : இல. 04 – 2022 மே

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மே 18ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.50 சதவீதம் மற்றும் 14.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. அண்மைய காலத்தில் பணவீக்கம் உயர்வடைந்து காணப்படுமென எறிவுசெய்யப்பட்ட போதிலும் 2022 ஏப்பிறல் 08ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில் சபையினால் எடுக்கப்பட்ட கணிசமான கொள்கைசார்ந்த வழிமுறைகள், திரண்ட கேள்வி … Read more

கோட்டாபயவை பதவியிலிருந்து நீக்க சர்வதேசம் உதவ வேண்டும் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து நீக்குவதற்கு சர்வதேச தலையீடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் பதவியிலிருந்து விலகியதால் எந்தப் பலனும் ஏற்படவில்லையெனவும், ஜனாதிபதியை உடனடியாக பதவியில் இருந்து நீக்கி நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கவும் முடிவுக்கு கொண்டுவரவும் ஒரு முடிவை எடுக்க … Read more

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கல் :தற்காலிகமாக இடைநிறுத்தம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகபிரதிகள் வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது. அந்த ததரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம் … Read more

மட்டக்களப்பு மங்களகம பிரதேசத்தில், காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டம்

US AID மற்றும் GLOBAL COMMUNITIES நிறுவனத்தின் நிதி அனுசரணையில், LIFT நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் காணி மத்தியஸ்தம் ஊடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் எனும் செயற்பாட்டில் காணிப்பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள் மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மங்களகம பிரதேசத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபையின் தவிசாளர் க.குருநாதன், உதவி தவிசாளர் என்.இளஞ்செழியன் மற்றும் காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினர் ஏ.வீ.எம்.முஸ்தபா ஆகியோரின் வழிகாட்டலில்  செயற்திட்டம் இடம்பெற்றது. பெறப்பட்ட 35 … Read more