பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை – G7 நாடுகள் வெளியிட்டுள் அறிவிப்பு

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் செலுத்துவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை … Read more

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லயிருந்த 21பேர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லயிருந்த 21பேரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் உள்ள கடற்கரையில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களுவாஞ்சிகுடி மற்றும் தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 10 மணியளவில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் கிரான்குளம் பகுதிகளை சேர்ந்தவர்கள். நான்கு பெண்கள் அடங்களாக 21பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு … Read more

ஏறாவூரில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகம்

ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகமொன்று திறக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது. அதேபோல் பெண்களுக்கென தனியான உடற்பயிற்சி வசதிகளும் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாத்திமா மகளிர் நூலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாசிகசாலைத் திறப்பு விழா ,செவ்வாய்க்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நகர சபைத் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஏறாவூரின் பெண் ஆளுமைகளான பிரதேச செயலாளர் நிஹாறா, ஏறாவூர் … Read more

பதவி விலகும் முடிவை மாற்றிக்கொண்ட மத்திய வங்கி ஆளுனர்!

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் தலைவராக நீடிப்பதாகவும், தான் முன்னர் கூறியது போன்று பதவி விலகப் போவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான திட்டங்களை இலங்கை மத்திய வங்கி இறுதி செய்துள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையும் … Read more

மட்டக்களப்பு பெரியகல்லாறு வீதிச் சோதனைச் சாவடியில் அதிநவீன கண்காணிப்பு கமராக்கள்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் அதி நவீன கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு  உத்தியோக பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரமவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா, மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருனாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க களுவாஞ்சிகுடிப் பிரதேச … Read more

Sri Lanka rejects motion on alleged genocide adopted in Canadian Parliament

The Government of Sri Lanka notes with regret the adoption of a motion in the Canadian Parliament on the alleged genocide of Tamils in Sri Lanka and recognizing May 18 as Tamil Genocide Remembrance Day. The Government categorically rejects the blatantly false allegation of genocide contained in the parliamentary motion with reference to Sri Lanka, … Read more

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையின் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், பெற்றோல் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை சென்றடைய குறைந்தது மூன்று … Read more

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல அவர்களின் இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு எஸ். ஜகத் சமரவிக்ரம நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பொலொன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அமரகீர்த்தி அத்துகோரல அவர்களின் இழப்பை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு எஸ். ஜகத் சமரவிக்ரம அவர்கள் இன்று (19) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் உறுதியுரையை எடுத்தார். அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார். அண்மையில் இடம்பெற்ற மோதல் சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பொலொன்னறுவை … Read more

புதிய அமைச்சரவை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல் – நாளை 10 பேர் பதவிப் பிரமாணம்

பத்து அமைச்சரவை அமைச்சர்கள் நாளைய தினம் (20) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா, விஜயதாச ராஜபக்ஷ, திரான் அலஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஈ.பி.டி.பி. … Read more