கோட்டாபயவுக்கு செக்மேட் வைத்த சர்வதேச நாணய நிதியம் – பதவி விலகுவாரா ஜனாதிபதி….!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஆனால் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. நாடு திவால் நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார். எனினும் … Read more

சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு மேலதிக பஸ் சேவை

இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களுக்கு வரும் மாணவர்களுக்காக சிசு செரிய பஸ்கள் மற்றும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். பரீட்சை பணியாளர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களின் நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ரயிலில் வருகை தரும் மாணவர்களை … Read more

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாணின் விலை அதிகரிப்பு

ஒரு இறாத்தல் பாணின்  விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பே இதற்குக் காரணம். அதன்படி பாண்  ஒரு இறாத்தலின்  (450கிராம்) விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை திருத்தம் இன்று (19) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது. Source link

வழங்கப்பட்டுள்ள காலக்கெடு: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை – செய்திகளின் தொகுப்பு

எதிர்வரும் 25ஆம் திகதிக்குப் பின் முன்னறிவிப்பின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் கலாநிதி சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளால் சுகாதார ஊழியர்களுக்கான சம்பள குறைப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் … Read more

தலவாக்கலையில் மண்சரிவு

மத்திய மலையகப் பிரதேசத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19) காலை தொடர் குடியிருப்புகள் தொகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமடைந்தன. வீடுகளில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு, நுவரெலியா பிரதேச செயலகம்‌ மற்றும் தலவாக்கலை … Read more

கொழும்பில் அரசியல்வாதிகளுக்கு குறைந்த விலையில் எரிபொருள் – அம்பலமான ஆதாரம்

கொழும்பு, நாரஹேன்பிட்டி பொலிஸ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொகுசு வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சிரச தொலைகாட்சி சேவை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள விலை காட்சிப்படுத்தல் திரை குறித்த கமெராவில் பதிவாகியுள்ளது. அதில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை 121.19 ரூபாவாக பதிவாகியிருந்தது. அதற்கமைய அரசியல்வாதிகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருள் 121.19 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு லீற்றர் 92 ஒக்டென் … Read more

பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் நெருக்கடியை காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஒரு காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். 13ஆவது யுத்த வீரர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.. தேசிய படைவீரர்கள் தினச் செய்தி தாய் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த, வீரமிக்க படைவீரர்களை  நாம் என்றும் மறக்க மாட்டோம். அவர்களின் தியாகத்தின் உயிர்ச்சக்தியை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். எனவே, … Read more

நாளை பணிக்கு வரும் அரச ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அரச சேவையின் அனைத்து அத்தியாவசியமற்ற ஊழியர்களும் நாளை பணிக்கு வருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (19) தெரிவித்தார். மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேபொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஐ.ஓ.சியின் அறிவிப்பு – செய்திப் பார்வை (Video)

தமது நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ.ஓ.சி அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், விளக்கமளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் … Read more

தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் பேரறிவாளன் நன்றி தெரிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய உயர் நீதிமன்றம் நேற்று (18) விடுதலை செய்தது. பேரறிவாளனின் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் இனிப்பு வழங்கி விடுதலையை கொண்டாடி மகிழ்ந்தனர். தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக பேரறிவாளன் தெரிவித்தார். அதன்படி நேற்று (18) சென்னை … Read more