மகிந்தவுக்காக வந்து சவப்பெட்டி வாகனத்தில் ஊர் திரும்பிய உறுப்பினர்கள்
கடந்த 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க அலரி மாளிக்கைக்கு வந்தவர்கள் சவப்பெட்டிகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் நடத்தியமையினால் வன்முறையாக மாறியது. இந்த நிலையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு வந்த சிலரை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் பேரே ஏரியில் தள்ளிவிட்ட காட்சிகள் வெளியாகியிருந்தது. இவர்களில் கம்பஹா மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட நால்வர் போராட்டக்காரர்களால் … Read more