மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பினை ஒழிப்பதற்கான சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதாரவழிகாட்டி ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் … Read more

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொள்ள பொலிஸார் திட்டம் – செய்திகளின் தொகுப்பு

காலிமுகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகச் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். காலிமுகத்திடல் அமைதியின்மை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல … Read more

இந்தியாவில் இருந்து 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகள்

குறைந்த வருமானத்தைக்கொண்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக, ஒரு வாரத்திற்கு போதுமான, பால் உள்ளிட்ட அத்தியயாவசிய பொருட்களைக்கொண்ட , 40 மில்லியன் உலர் உணவுப் பொதிகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த நன்கொடையின் முதற்கட்டமாக ஒரு மில்லியன் உணவுப் பொதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று நாளை (18) இலங்கைக்கு வரவுள்ளதாக அத்தியாவசிய உணவு விநியோக நெருக்கடி குறித்து ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணம், பதுளை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள குறைந்த வருமானத்தைக்கொண்ட … Read more

பிரதமர் நியமித்த விசேட குழுக்களின் பிரதிபலன்கள்: குறுகிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர்இ விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டமை, மக்களின் நன்மைகளை கருத்திற் கொண்டே என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை அவர் விடுத்துள்ளார் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவுபடுத்துவதற்காக இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும். இதற்காக, அரசாங்கத்தின் எந்த நிதியும் செலவிடப்படவில்லை. இதனூடாக, மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் அதிகரிக்கப்படும். இதன் பிரதிபலன்கள் குறுகிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கும் என … Read more

அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட  அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச ஊழியர்களை அலுவலகங்களுக்கு அழைப்பதனை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன் சந்திர இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவன தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொலைதூரத்தில் … Read more

இலங்கையில் இன்று பதிவாகியுள்ள அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 364.73 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 354.76 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதியானது 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.  ரூபாவின் பெறுமதி உயர்ந்தது! மத்திய வங்கி அறிவிப்பு  Source link

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இன்றாகும். முதலாவது இன்னிங்க்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி சற்று முன்னர் 2 விக்கெட் இழப்புக்கு 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ,இலங்கை அணி 397 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளது. பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி  டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் (15) சட்டோகிராமில் ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் … Read more

வரலாற்றில் முதல் தடவையாக ஆளும் கட்சி வரிசையில் ரணில்,மகிந்த

வரலாற்றில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் பிரதமர் மகிந்தவும் நாடாளுமன்றில் ஆளும் கட்சி முன்வரிசையில் அமர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றம் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு கூடவுள்ளது. இதேவேளை, இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு நாடாளுமன்ற செயற்குழுக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இதுவரையில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துக்கொள்வார். முன்னாள் பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவிற்கு ஆளும் … Read more

புதிய பிரதி சபாநாயகராக திரு.அஜித் ராஜபக்ஷ தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் திரு.அஜித் ராஜபக் ஷ மேலதிக  32 வாக்குகளால் இன்று (17) தெரிவுசெய்யப்பட்டார். திரு. சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை ,இரண்டாவது முறையாக இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் இவர் தெரிவுசெய்யப்பட்டார்.