நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த மர்ம நபர்கள்…! அச்சத்தில் அரசியல்வாதிகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத குழுவொன்று நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத நபர்கள் சிலர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும் தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தற்போது குழு கூட்டம் நடத்தினோம். ஆளும் கட்சி உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு வந்தார்கள். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. … Read more

பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 

பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதினால்பிரதி சபாநாயகரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! அவ்வழியே செல்லும் சாரதிகளுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

பொல்துவ சந்தியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதன் பின்னர் இன்றையதினம் முதலாவது தடவையாக நாடாளுமன்றம் கூடுகின்றது.  இதற்கமைய இன்றையதினம் முற்பகல் 10 மணியளவில நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.   இதுவரையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் காரணமாக … Read more

சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. பொதுவான வானிலை முன்னறிவிப்பு2022 மே 17ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது. நாட்டின்மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, … Read more

அரசியல்வாதிகளின் முகத்திரையை ஜனாதிபதி முன்னிலையில் கிழித்த பொலிஸ் மா அதிபர்

அண்மைய நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றமைக்கு பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி முன்னிலையில் பொலிஸ் மா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார். ஒவ்வொரு பொலிஸ் பிரிவுக்கும் அந்தந்த அரசியல்வாதிகளின் செல்வாக்கின் பேரிலேயே பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன குறிப்பிடுகின்றார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் … Read more

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை கைது செய்யுமாறு உத்தரவு

மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கம  தாக்குதலுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபரால் பெயரிடப்பட்ட 22 பேரில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. … Read more

மிக இக்கட்டான நிலைக்கு முகம் கொடுக்கப் போகின்றோம்! பல தகவல்களை வெளியிட்ட பிரதமர் ரணில் (video)

மின்சாரத் தேவையில் நான்கில் ஒன்றை உற்பத்தி செய்ய எரிபொருளே பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாளாந்த மின்வெட்டு இன்னும் சில நாட்களில் 15 மணித்தியாலங்களாக மாறவும் இடமுண்டு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பிரதமரானதும் நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க ஆற்றும் முதலாவது உரை இதுவாகும். பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரதமர் பதவியைப் பொறுப்பேற்றுள்ள நிலையில் பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் இன்று பிரதமர் உரையாற்றியுள்ளார்.  இதன்போது … Read more

கொழும்பில் மீண்டும் வெடித்த இளைஞர்கள் போராட்டம்! பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றம் (Video)

பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.  கடந்த 09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு நீதிக்கோரி மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது  இன்று (16) பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. குறித்த வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. Source link

ரணிலின் அரசாங்கத்திற்கு ஆதரவு! சஜித் தரப்பின் திடீர் முடிவு

நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள்  சக்தி கட்சி தீர்மானம்  மேற்கொண்டுள்ளது. புதிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்கு நன்மை பயக்கும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பதவிகளை ஏற்காமல், நாடாளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு தமது நாடாளுமன்ற குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக அந்தக் கட்சி  தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்பிக்களுடன்  அரசாங்கம் ஒப்பந்தம் செய்ய முயற்சித்தால் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் கட்சி … Read more