“முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்”

“முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்”. என்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.  புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புனித வெசாக் நோன்மதி தினச் செய்தி  மூன்று உன்னதமான நிகழ்வுகள் நடந்த மகத்தான வெசாக் நோன்மதி தினத்தை நினைவுகூர்ந்து, இலங்கை பெளத்த மக்கள் உட்பட உலகெங்கிலும் வாழும் பெளத்தர்கள் பூஜை வழிபாடுகள் மற்றும்  புண்ணிய கிரியைகளில் ஈடுபடுகின்றனர். புத்த பெருமான் போதித்த தம்மப் போதனைகள் … Read more

அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் கேள்வியெழுப்பியுள்ள நாமல் ராஜபக்ச!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான ஆரம்பக் கூற்றுக்கள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த திங்கட்கிழமை நிட்டம்புவவில் இடம்பெற்ற வன்முறையின் போது அமரகீர்த்தி அத்துகோரள தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்நிலையிலேயே, அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து … Read more

ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர் கூட இனி நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது – ரணில் தகவல்

ராஜபக்ச குடும்பத்தினரில் ஒருவருக்கேனும் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட வர முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ராஜபக்சர்களை பாதுகாக்கும் நோக்கத்திலோ அல்லது அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதத்திலோ செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கேள்வி : மிகவும் தீர்க்கமான சந்தர்ப்பத்தில் பிரதமராக பதவி ஏற்றுள்ளீர்கள். பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள் ? … Read more

வெலிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் படுகாயம்

வெலிகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிகம கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடையொன்றுக்கு அருகில் இனந்தெரியாத நபர் ஒருவர் இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   Source link

ரணிலிடமிருந்து சஜித்திற்கு சென்றுள்ள அவசர கடிதம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதம் இன்றைய தினம் அனுப்பப்பட்டுள்ளது.  அந்த கடிதத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை புதிய அரசாங்கத்தில் அங்க வகிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் பதவியை ஏற்க தயாரென அறிவித்த சஜித் புதிய அரசாங்கத்தில் பிரதமராகப் பதவியேற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். நாட்டில் தற்போது நிலவும் … Read more

நாளை மின் துண்டிப்பு இடம்பெறாது

நாளை மின்துண்டிப்பு இடம்பெறாது. வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளை மறிக்கும் மக்கள்: பொலிஸார் களத்தில் (Videos)

கொழும்பு ஆமர் வீதியில் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். எரிவாயு கோரியே இவ்வாறு ஆர்ப்பாட்டம மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.  கடந்த 9ஆம் திகதி நாட்டில் அசாதாரண நிலை ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை வேளையில் தளர்த்தப்பட்டு பிற்பகல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் இன்றைய தினம் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இவ்வாறான சூழ்நிலையில் இன்று … Read more

04 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்றனர்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் இன்று, (14) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இவ்வாறு நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (14) பிற்பகல், ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்                                    – வெளிநாட்டலுவல்கள் 02. திரு.தினேஷ் குணவர்தன                                     – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண … Read more

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல காலமானார்

சிட்னியில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் லக்ஷ்மன் ஹூலுகல்ல அவர்கள் 2022 மே 14ஆந் திகதி, சனிக்கிழமையன்று அவுஸ்திரேலியாவின் சிட்னியில் குறுகிய கால சுகவீனத்தால் காலமானார் என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றது. அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையில் உள்ள அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன், மறைந்த துணைத் தூதுவர் ஹூலுகல்லவின் பூதவுடல் உரிய சம்பிரதாயங்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு2022 மே 14