ரணில் பிரதமரானதன் பின்னர் டொலர்களை வழங்கும் இன்னுமொரு நாடு!

இலங்கைக்கு 500,000 நியூஸிலாந்து டொலர்களை வழங்குவதாக நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹுடா டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும், பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் இந்த நிதி வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவுத் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றின் ஊடாக இலங்கைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. This … Read more

நாடாளுமன்றத்திற்கான அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களின் வாகனங்களின் எரிபொருளுக்கான 56 லட்சம் ரூபாய் பணம் செலுத்தப்படாமையால் நாடாளுமன்றத்தின் அனைத்து பேருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற போக்குவரத்து சேவைக்காக 9 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் 5 தனியார் பேருந்துகளும் ஈடுபடுகின்றன. அந்த பேருந்துகளுக்கான எரிபொருள் கட்டணமாக 56 லட்சம் ரூபாய் செலுத்தப்படாமையால் அவற்றுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களுக்கு இதற்கு முன்னர் பத்தரமுல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. இந்நிலைமை காரணமாக … Read more

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்

இலங்கையை ச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு2022 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது … Read more

சில மாவட்டங்களில் மழையுடனான கால நிலை தொடரும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ … Read more

தொடரும் அரசியல் நெருக்கடி – இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா

தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்க மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரித்தானிய தனது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கைக்கான அத்தியாவசியப் பயணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்திற்கு பயணத்திற்கு எதிராக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருக்கும் பிரித்தானிய பிரஜைகள் அல்லது பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள் பேரணி மற்றும் … Read more

பசில் விளையாட முடியாத போட்டியை விளையாட தயாராகும் ரணில் – அச்சம் வெளியிட்ட வீரவன்ச

அரசாங்கத்தின் நம்பகமான நகர்வுகளுக்கு ஆதரவளிப்போம் என தேசிய சுதந்திர முன்னணியின் (NFF) தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். தமது தரப்பால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்த போதிலும், திடீரென ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் எதிர்கொள்ளப்போகும் நெருக்கடி குறித்து ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வந்தோம். அதன் விளைவாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவும் … Read more

ரணிலால் டொலரின் விற்பனை விலை குறைந்ததா – வெளியான தகவல்

 அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று கணிசமான வீழ்ச்சியை கண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாளாந்த நாணய மாற்று விகித அட்டவணையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவான இன்று பதிவாகியிருந்தது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த பின்னர் அமெரிக்க டொலரின் விற்பனை விலை குறைவடைந்தமை தொடர்பில் பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. எனினும், திங்கட்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நாணய மாற்று விகிதத்தின் இடைக்கால … Read more

வடரெக சிறைக் கைதிகள் மீதான தாக்குதல்: நீதி கோரி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் முறைப்பாடு

வடரெக சிறைச்சாலையின் கைதிகளையும் அவர்களின் பாதுகாப்பிற்கு வந்த சிறைச்சாலை அதிகாரிகளையும் கடந்த 05.09.2022 அன்று மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், சிறைச்சாலை உடமைகளுக்கு சேதம் விளைவித்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நேற்று (12) பொலிசாரிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 9ஆம் திகதி, வடரெக சிறைச்சாலையில் இருந்த கைதிகளை அவர்களது பணியிடங்களுக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வந்துள்ளனர். அந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டக்காரக் … Read more