ஜனாதிபதி பதவி விலகுவது ஒரு போதும் நடக்காது – ரணில் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி வரும் அரசாங்க எதிர்ப்பாளர்களின் உணர்வுடன் தான் உடன்படுவதாக இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அது ஒருபோதும் நடக்காது என பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜபக்ச அரசின் அனைத்து கொள்கைகளையும் மாற்றப் போகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்களுக்கு மூன்று வேலை உணவு கிடைப்பதை உறுதிசெய்வதாக குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சிதைந்துவிட்டது. இந்நிலையில், … Read more

சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தோரை அடையாளம் காண நடவடிக்கை

அமைச்சர்களின் வீடுகளையும் சொத்துக்களையும் தீயிட்டுக் கொழுத்தியவர்களை கைது செய்வதற்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சந்தேக நபர்களை சிசிரிவி காட்சிகளின் மூலம் அடையாளங்காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக பொலிசார் அறிவித்துள்ளனர்

ஊரடங்கு உத்தரவு: சனி மாலை 6 முதல் ஞாயிறு அதிகாலை 5 மணி வரை

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (14) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படவுள்ளது. மீண்டும் நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (14) அறிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் ,அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது … Read more

ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு முழு ஆதரவு – மகிந்த கட்சி அறிவிப்பு

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண கட்சியின் சுதந்திரத்தை பாதுகாத்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரச தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று (13) காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது. கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். “நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய … Read more

வனிதா – தேவயாணி இடையே மோதல்! கடும் கோபத்தில் வனிதா செய்த விஷயம்

நடிகை தேவயானி ஒரு காலத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தாலும் அதற்கு பிறகு சின்னத்திரையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தொடர்கள் ஹிட் ஆகி வருகின்றன. தற்போது தேவயாணி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். வனிதா உடன் மோதல் தேவயாணி பணியாற்றிவரும் எப்எம் சேனலில் ஒரு பேட்டி கொடுப்பதற்காக நடிகை வனிதா வருகிறார். அந்த பேட்டிகான கேள்விகளை தேவயானி தான் எழுதி கொடுக்கிறார். வனிதாவின் சொந்த … Read more

சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் புதிய பிரதமர்

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் நோக்கோடு ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க உதவி வழங்கும் நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து  கலந்துரையாடினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கைக்கான சீனத் தூதுவரைச் (Yi Xianliang) சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை பற்றி விளக்கமளித்தார்.இலங்ககைக்குத் தேவையான சகல உதவிகளையும் வழங்குவதாக சீனத் தூதுவர் இதன் போது உறுதியளித்தார். ஜப்பான், அமெரிக்கா. இந்தியா ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகளையும் பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கைக்கு உதவிகளை வழங்குவது பற்றி கலந்துரையாடுவதற்காக ஜப்பான் தூதுவர் … Read more

இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலைத் இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்தது

இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தலை 2022 மே 06 அன்று ஜோன் எக்ஸ்டர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் தொடங்கிவைத்தது. இலங்கையின் பசுமை நிதி வகைப்படுத்தல் என்பது சுற்றாடல் ரீதியாக நிலைபெறத்தக்க பொருளாதார நடவடிக்கைகளை வரைவிலக்கணம்செய்து வகைப்படுத்துவதுடன் 2019இல் மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலில் எடுத்துரைக்கப்பட்ட முக்கிய செயற்பாட்டு விடயமொன்றாகக் காணப்படுகின்ற வகைப்படுத்தல் முறைமையொன்றாகும். இவ்வகைப்படுத்தலானது, பன்னாட்டு ரீதியான சிறந்த நடத்தைகளுக்கு இசைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு பின்னணிக்கு ஏற்றவிதத்தில் … Read more

தேர்தலில் தோற்ற ரணிலுக்கு…. அடித்த அதிர்ஷ்டம்..!! ராசியா காய் நகர்த்தலா?

கடந்த பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்த ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை வைத்துக் கொண்டு நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்த ரணில் விக்ரமசிங்கவினால் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியும் என எண்ணிய பலருக்கு இன்றைய ரணிலின் அவதாரம் பிரம்மிக்க வைக்கலாம். 225 பேர் சூழ்ந்திருந்த அவையில் தனியொருவருவராக இருந்து இன்றைய இலங்கை அரசியலில் கிங் மேக்கராக திகழ்கின்றார். 1970 களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக தனது … Read more