வன்முறையற்ற அகிம்சை சமூகத்தை உருவாக்க – மட்டக்களப்பில் பிரார்த்தனை நடைபவணி

வன்முறையற்ற அகிம்சை ரீதியான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நண்பர்களாக ஒன்றினைந்து மட்டக்களப்பில் பிரார்த்தனை நடைபவணி இன்று (13) திகதி இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுக்கப்பட்டது. மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து ஆரம்பித்த குறித்த பிரார்த்தனை நடைபவணி அமைதியான முறையில் மட்டக்களப்பு நகர மத்தியில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்தது. நடைபவணி காந்தி பூங்காவை சென்றடைந்ததும், நடை பவணியில் கலந்துகொண்டவர்கள் தமது ஆடைகளில் தொங்கவிடப்பட்டு காட்சிப்படுத்தியிருந்த பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகளை … Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகப்பரீட்சைகள் ஒத்திவைப்பு

2020/2021 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு, பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான விதிகளின் கீழ் நாளை நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சைகளை ஒத்திவைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை விலைச் சுட்டெண்

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டதுடன், நேற்று (12) கொழும்பு பங்குச் சந்தையில் விலைச் சுட்டெண்களில் அதிகரிப்பை காணக்கூடியதாக இருந்தது. இதன்படி, அனைத்து பங்குகளினதும் விலைச் சுட்டெண் 237.99 ஆக அதிகரித்து நேற்று 7754.62 ஆக பதிவாகியது. இதேவேளை நேற்று (12) S&P Sri Lanka Twenty விலைச் சுட்டெண் 93.59 ஆல் அதிகரித்து காணப்பட்டது.

உலகில் 6 முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ,ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பிற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், உலக அரசியல் வரலாற்றில் உலக சாதனை படைத்துள்ளார். உலகில் ஆறு  முறை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே அரசியல்வாதி இவர்தான். சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக, ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பதவியேற்றார். , இதன் மூலம்   இலங்கையின் பிரதமராக நேற்று (12)ஆறாவது முறையாக பதவி ஏற்றுள்ளார். 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் பெற்ற ஜனாதிபதியின் கீழ் மூன்றில் இரண்டு … Read more

சட்ட விரோத செயல்களுக்கு எதிராக பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

தாக்குதல், பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் தீ வைப்பு போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும் எதிராக எந்தவொரு அரசியல் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சில் (11.05.2022) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். இதன்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல ஊடகவியலாளர்கள் சமூகமளித்திருந்தனர். சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டிய அவர், குற்றச் செயல்கள் தொடர்பான அனைத்து வீடியோ காட்சிகளையும் … Read more

ரூபாவின் பெறுமதி உயர்ந்தது! மத்திய வங்கி அறிவிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.   இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தலின்படி,  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக பதிவாகியுள்ளது.  இது நேற்றைய விலையில் இருந்து 12.51 ரூபாய் குறைவாகும் என்பதுடன் நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை  விலை 377.49 ரூபாவாக பதிவாகியிருந்தது.  இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்டுகளுக்கு  நிகரான ரூபாவின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளதாக … Read more

மழையுடனான வானிலை சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 13ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலையும் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் வீசும் பலத்த காற்றும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. … Read more

அமைதியான பொதுமக்கள் படையினரின் ரோந்து வாகனங்கள் தொடர்பில் அச்சப்பட அவசியமில்லை

கடந்த புதன்கிழமை (11) திகதி மாலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றி தெரிவித்துள்ள பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், நாட்டில் ஏற்பட்டிருக்கும் இயல்பு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடும் நிலவுகின்றமையினால் இராணுவத்திற்கு குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை தவிர்த்து ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையிலான படையினரை அழைத்துச் … Read more

ரணிலுடன் இணைவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! முடிவை அறிவித்த முக்கியஸ்தர் (Photo)

10 கட்சிகளின் புதிய குழு பிரதமர்  ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் இணையாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  எனினும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டங்களுக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.  Group of 10 Parties (G10) will not join @RW_UNP led government. Nevertheless, we will support the Government for its economic recovery … Read more

Statement by High Commission of India

High Commission categorically denies that it or the Indian Consulates General or the Assistant High Commission of India in Sri Lanka have stopped issuing visas. 2.     In the past few days, there were operational difficulties due to the inability of our Visa Wing staff, most of whom are Sri Lankan nationals, to attend office. … Read more