ரக்பி தொடர்பில் முன்னாள் நாமல் வெளியிட்டிருந்த வர்த்தமானி: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

இலங்கை ரக்பியை (SLR) தற்காலிகமாக இடைநிறுத்தி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளின் செயற்பாடுகளை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார். இவ்வாறு இடைநிறுத்தி அவர் வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளமை … Read more

ரணிலுக்கு கிடைத்த முதல் வெற்றி – பல பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

அதாள பாதாளத்திற்கு வீழ்ந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் நேற்றைய தினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்றுக்கொண்டதன் அடுத்த நிமிடமே இலங்கையில் பல சாதக மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. முதற்கட்டமாக பெரும் பின்னடைவை சந்தித்திருந்த பங்குச் சந்தை திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதேவேளை இன்றையதினம் இலங்கை ரூபாவின் பெறுமதியிலும் சாதக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய விடயமாக அந்நிய செலாவணி இருப்பை அதிகரிப்பதே முக்கிய விடயமாக … Read more

அரசியல் மாற்றத்தால் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவின் பெறுமதியில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரச அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்களில் இன்றைய தினம் ஒரு டொர் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 375 முதல் 380 ரூபாவுக்கு டொலர் ஒன்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர், இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பங்கு சந்தையும் நேற்றைய தினம் திடீரென வளர்ச்சி … Read more

ரணிலுக்கே முழு அதிகாரம் – கைவிரித்தார் கோட்டாபய

புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கே அமைச்சரவையை தெரிவு செய்யும் முழு அதிகாரமும் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர்களுடன் நேற்று கலந்துரையாடிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு புதிய பிரதமருக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி முன்னாள் அமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் பதவிக்கு பல பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தான் தெரிவு … Read more

சாதாரண தரப் பரீட்சை : பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகளுக்கு தடை

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி வகுப்புக்கள் என்பனவற்றை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய வினாப்பத்திரங்களை அச்சிடுவதும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான வினாப்பத்திரங்கள் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது. மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் நாளைக் காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (12) அறிவித்தது. இந்தக் காலப்பகுதியில் ,அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு … Read more

உண்மைகளை அம்பலப்படுத்த தயாராகும் மகிந்த – வெளியான தகவல்

தான் பிரதமர் பதவியில் இருந்து விலகும் தீர்மானம் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு உண்மையை வெளிப்படுத்துவேன் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​நாட்டின் நிலைமை மற்றும் … Read more

விவாதத்திற்கு வருகின்றது ஜனாதிபதிக்கு எதிரான எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை (NCM) எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்வைத்துள்ளனர். பத்தரமுல்லை, தியத்த உயனவில் இடம்பெற்ற ‘ஹொரு கோ கம’ போராட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டர். குறித்து காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மே … Read more