ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவு நாளை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு உத்தரவு நாளை (12) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ரத்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரத்கம பிரதேச சபை தலைவரின் வீட்டிற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். Source link
தற்போது நாட்டில் டாலர்களோ ரூபாய்களோ இல்லை, எதிர்காலத்தில் நாட்டைக் கைப்பற்றும் எந்தவொரு குழுவிற்கும் இது மிகவும் கடினமான பயிற்சியாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தனது டுவிட்டமர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த பதிவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளருடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து … Read more
காலிமுகத்திடல் பகுதிக்கு புறக்கோட்டை பொலிஸார் பலர் வந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்றைய தினம் காலிமுகத்திடல் பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுத்து வந்த மக்களை தாக்கிய மகிந்தவிற்கு ஆதரவான குழுவினர், அங்கிருந்த கூடாரங்களையும் எரித்து சாம்பலாக்கியிருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் மற்றும் பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காகவே பொலிஸார் அங்கு வந்துள்ளதாக தெரியவருகிறது. Source link
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் அதற்கு மதிப்பளித்து, அமைதியான முறையில் செயற்படுமாறு பாதுகாப்புப் படைகளின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை மக்கள் தற்போது முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு சென்ற மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டத்தை போன்றே தற்போது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சிறிய அளவிலான மக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Source link
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் மக்கள் வாகனங்களை சோதனையிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரமுகர்கள் குழுவொன்று நாட்டிலிருந்து வெளியேற தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில் போராட்டக்காரர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே செல்ல அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய … Read more
ஆளுங்கட்சியின் 25 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மக்களால் நேற்றிரவு அடித்து நொறுக்கப்பட்டு எரியூட்டப்பட்டன. ‘மைனா கோ கம’, ‘கோட்டா கோ கம’ அறவழிப் போராட்டக்காரர்கள் மீதும், அவர்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மீதும் ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்களின் போராட்டங்கள் வெடித்தன. மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடாக வீரகெட்டிய – மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது. ராஜபக்சக்களின் பெற்றோரின் … Read more
இந்த வருடத்தில் இதுவரையில் 100,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதோடு, எதிர்வரும் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வளர்ச்சியடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் செயலாளர் எம்.எப்.எம்.அர்ஷாத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தீவிரமடைந்த கலவரம்! மற்றுமொரு அரசியல்வாதி மரணம் இலங்கை மத்திய வங்கியின் 2021 வருடாந்த அறிக்கையின் பிரகாரம், கடந்த வருடம் வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் … Read more