இலங்கையில் இன்று (09) கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை
இலங்கையில் இன்று (09) கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் இன்று (09) கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 19
ஊரடங்குச்சட்ட காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டுமென பொலிசார் அறிவித்துள்ளனர். ஊரடங்குச்சட்டத்தை மீறுவது பொது அமைதியைப் பேணுவதற்கு தடங்கலாக கருதப்படும். இதனடிப்படையில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள மதுபான நிலையங்கள் ஊரடங்குச்சட்டம் முடிவுக்கு வரும் வரை மூடப்பட வேண்டுமென மதுவரி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அரச ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து அமைதியாக இடம்பெற்ற போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதன் விளைவான அரச ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர்களை அழைத்து வந்த வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், இந்த வன்முறை தீவிரமடைந்ததை தொடர்ந்து … Read more
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம இன்று வன்முறையாக மாறியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த போராட்ட களத்தில் இன்று குண்டர்கள் களமிறங்கி போராட்டகாரர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியிருந்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களே தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் கொழும்பில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், அரச ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மக்கள் தாக்க … Read more
அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை காரணமாக பொதுப் பாதுகாப்பையும், சமாதானத்தையும் பேணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து தரங்களுக்கும் உரிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறையும் ஓய்வு தினங்களும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளையும் தமது கடமை இடத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்படாத வகையில் நைஜீரியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் ஒன்று வருகைத் தரவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த விமானம் நாளை(10) அதிகாலை 02.11 மணிக்கு முன்னதாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவில் இருந்து B.Sc4024 என்ற விமானமே இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த திடீர் விமானத்தின் வருகையின் நோக்கம் என்ன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய … Read more
நாடளாவிய ரீதியில் இன்று, (09) இரவு 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க 2022.05.11 புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் … Read more
மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை அடுத்து தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன் பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளனர். தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்காலை நகர மையத்திலிருந்து கார்ல்டன் ஹவுஸ் நோக்கி பேரணியாகச் சென்று வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் இராஜினாமா செய்தி பரவியதையடுத்து போராட்டக்காரர்கள் பட்டாசு வெடித்து கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக பாற்சோறு … Read more
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.05.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
மன்னார் கடல் நிலப்படுகையில் காணப்படும் எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கவனம் செலுத்தியது. வலுக்தி அமைச்சு தொடர்பான 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் நேற்று (05) கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கவனம் செலுத்தப்பட்டது. … Read more