ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு! (PHOTO)

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலை, முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதனுடன் ஒத்ததான நோயாளர் பராமரிப்பு சேவைகள், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் … Read more

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

அனுராதபுரம் சல்காதுவ மைதானத்தில் (09) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தின் முதலாவது கூட்டத்தின்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை இன்று அனுராதபுரத்தில் இருந்து புதிய பயணத்தை ஆரம்பிக்கின்றோம். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக ஞாபகம். போரில் வெற்றி பெற்ற பின்னர் 2010ஆம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை அனுராதபுரத்தில் இருந்து ஆரம்பித்தோம். அதேபோன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களும் அனுராதபுரத்தில் இருந்து தனது ஜனாதிபதி … Read more

பௌத்த பிக்குவாக துறவறம் பூண்ட பொலிவூட்டின் பிரபல நடிகர்!

இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நேற்று (10) பேங்கொக்கில் துறவறம் பூண்டார். இதன்படி அவர் அடுத்த 15 நாட்களை துறவியாக தமது வாழ்க்கையை கழிக்கவுள்ளார். தர்மத்தைக் கற்றுக் கொள்ளவும், இந்தியாவில் மதத்தை வளர்க்கவும் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “தம்மம் கற்க வேண்டிய நேரம். நிலையற்ற தன்மையைப் புரிந்து கொள்ளும் நேரம். அறிவைப் பெறுவதற்கான நேரம் இது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அவருக்கு தாய்லாந்து உட்பட பல ஆசிய … Read more

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் 2022” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவும் விளம்பரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அது போலியானதெனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு தெரிவித்துள்ளது. குறித்த போலி வேலைவாய்ப்பு பிரச்சாரம் நடவடிக்கையில், ஆட்சேர்ப்பு மூலம் உடனடி பணி அனுமதிகளை வழங்கப்படுவதாக உறுதியளித்து மக்களை … Read more

குவைத் நிதியத்தில் இருந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கான கடன் ஒப்பந்தம் கொழும்பில் வைத்து கைச்சாத்து

அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் நெதல் ஏ. அல்-ஒலாயன் தலைமையிலான குழுவினர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கும் அவற்றைச் சித்தப்படுத்துவதற்குமான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். கிழக்கு, தெற்காசிய மற்றும் பசுபிக் நாடுகளுக்கான நடவடிக்கைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் யூசுப் அல்-படரை உள்ளடக்கிய விஜயம் செய்திருந்த குழுவினர், இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் … Read more

பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த யாசகர்

ஹக்மன பகுதியில் உயிரிழந்த யாசகர் ஒருவர் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த யாசகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில் அவரிடம் இருந்து இலட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. யாசகரின் காற்சட்டைகளிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹக்மன – கொங்கல பகுதியில் வாழ்ந்த வந்த 69 வயதான E.S.விமலதாஸ என்ற யாசகரிடமிருந்தே, இவ்வாறு பெருந்தொகை பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. உயிரிழந்த  யாசகர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகிலேயே, அவர் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  Source … Read more

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை

மத்தள விமான நிலையத்திற்கும் உஸ்பெகிஸ்தானுக்கிடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. உஸ்பெகிஸ்தான் விமான சேவைக்கு சொந்தமான UZB 3525 என்ற விமானம் 135 சுற்றுலா பயணிகளுடன் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தது. குளிர்பருவ காலத்தில் இலங்கையை இலக்காகக் கொண்டு இந்த விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் மூலம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் , வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த நிதி அமைச்சர் பசில்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.  இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  பால் மா, எரிவாயு, கோதுமை மா, சீமெந்து போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக நிதியமைச்சர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.   Source link

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கௌரவ பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (10) பிற்பகல் பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அலரி மாளிகையில் நடைபெற்ற அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு கௌரவ பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக … Read more