இந்தியாவில் 5 வீதமாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2ஆவது நாளாக 1 இலட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று (08) காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67,597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 39 ஆயிரத்து 611 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 22,524 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு விகிதம் 7.25 சதவீதத்தில் இருந்து 5.02 … Read more

தமிழர்களின் சுய உரிமையை உறுதி செய்யுங்கள்! – இந்தியா இலங்கைக்கு அழுத்தம்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு சமத்துவம், நீதி மற்றும் சுய உரிமையை உறுதி செய்ய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளார். புது டில்லியில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவைப்படும் காலங்களில் இந்தியா எப்போதும் இலங்கையுடன் துணை நிற்கும் என்றும் எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்று இந்திய வெளிவிவகார … Read more

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையில் 249 மில்லியன் ரூபா செலவில் பன்சேனை கொங்கிறீட் வீதி வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்தும்நோக்கில் முன்னெடுக்கப்படும்“அனைவருக்கும் சுத்தமான குடிநீர்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடிநீர் இணைப்பினை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகள் நேற்று (08) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, காஞ்சிரங்குடா கிராமத்திற்கான குடி நீர் வழங்கும் திட்டத்தினையும், காஞ்சிக்குடா தொடக்கம் பன்சேனை வரையிலான 6 கிலோமீற்றர் பிரதான வீதியினை … Read more

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களின் சேவைக்காலம் மற்றும் பணம் அனுப்பும் தொகையின் அடிப்படையில் வரிச் சலுகையில் வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இந்த கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பதிலளித்த தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இது தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதேவேள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அனுப்பும் ஒரு டொலர் ஒன்றிற்கு 240 ரூபாவை வழங்க முன்மொழிந்துள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் … Read more

தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கைகை மத்திய வங்கி தொடங்குகின்றது

தேசிய வெளிநாட்டு பணவனுப்பல் நடமாடும் செயலியினை இலங்கைகை மத்திய வங்கி தொடங்குகின்றது.  

நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி! மீண்டும் உயர்கின்றது எரிபொருள் விலை

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்கனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். IOC நிறுவனம் தனது விநியோக நிலையங்களில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எடுத்த தீர்மானத்துடன் ஒப்பிட்டு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது டீசல் லிட்டர் ஒன்றுக்கு 32.50 ரூவாவும், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாம் நட்டம் ஏற்படுவதாக அவர் மேலும் … Read more

மட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள் (Video)

Courtesy: Saravanan மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள திராய்மடு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டதுடன் பிரேத பரிசோதனையில் உயிரிழந்ததற்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததையடுத்து சடலத்தின் உடற் கூறுகள் அரச பகுப்பாய்வுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை 04ம் திகதி திராய்மடு முருகன் கோவிலுக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குறித்த சடலம் செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான பாடசாலை அதிபர்  செபநாயகம் மங்களச்சந்திரா( 53 ) என அவரது சகோதரி … Read more

11 இலட்சம் இலங்கையர்கள் தொடர்பில் கசிந்த தகவல்: செய்திகளின் தொகுப்பு(Videos)

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட 11 இலட்சத்து 70 ஆயிரம் பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எம்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார். 20 – 29 வயதுக்கிடைப்பட்டவர்களில் 7 லட்சத்து 19,000 பேர் இதுவரை எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், 30 – 60 வயதுக்கிடைப்பட்டவர்களில் 03 இலட்சத்து 86 ஆயிரத்து 408 பேர் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை … Read more